ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது: 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் || techer merit examination today 6 lakh above teachers writing
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
  • சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 40 பேர் பலி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அரையிறுதியில் கோவா அணி
  • பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார்: உச்சகட்ட பாதுகாப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது: 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்
ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது: 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்
சென்னை, ஜூலை.12-
 
ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடைபெறும் இந்த தேர்வில் 6 1/2 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிகளில் (தனியார் பள்ளிகள் உள்பட) ஆசிரியராக பணியாற்ற முடியும். தமிழக அரசை பொறுத்தவரையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு (60 சதவீத மதிப்பெண்) மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணை கொண்டும் நியமிக்க முடிவு செய்துள்ளது.
 
இந்த நிலையில், தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களையும் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
 
இதற்கு 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் தபால் மூலமாக அனுப்பப்பட்டது. ஹால்டிக்கெட் பெறுவதில் சிக்கல் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,027 இடங்களில் நடக்கிறது. 4 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியைகள் உள்பட 6 1/2 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு பணியில் 55 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடைபெறும். சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 78 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வுக்கூடத்திற்குள் வந்துவிடுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
 
தேர்வு அறையினுள் செல்போன், கால்குலேட்டர் உள்பட மின்னணு சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதித்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு உளவு: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 2 பேர் ஜம்மு காஷ்மீரில் கைது

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிற்காக வேலை பார்த்து முக்கிய பாதுகாப்பு தகவல்களை அளித்ததாக கூறி, பணியில் ....»

MudaliyarMatrimony_300x100px.gif