திருச்சியில் காதல் விவகாரத்தில் பிளஸ் 1 மாணவி தீக்குளித்து தற்கொலை || trichy love problem student self immolation
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
திருச்சியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
திருச்சியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி  தீக்குளித்து தற்கொலை
திருச்சி ஜூலை.11-

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்தவர் அசோக். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது உறவினர் மங்களநாயகி. இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மாரக்கியூரில் வசித்து வருகிறார்.

இவரது மகள் ரஞ்சிதா (16) பிளஸ்-1 மாணவி. ரஞ்சிதாவுக்கும், ஒரு வாலிபருக்கும் படிக்கும் போது காதல் ஏற்பட்டது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ரஞ்சிதா காதலரை சந்தித்து பேசி வந்தார்.

இதனால் ரஞ்சிதாவை திருச்சியில் உள்ள உறவினரான ராஜேஸ்வரி வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொண்டு வந்து விட்டனர். இந்த நிலையில் இன்று காலை ரஞ்சிதா அலறும் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்தனர்.

அப்போது ரஞ்சிதா தீயில் உடல் கருகிய நிலையில் கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. இதுபற்றி தென்னூர் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஞ்சிதா காதல் பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்தாரா, அல்லது வேறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

திருச்சி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, சண்முகப்பிரியா, முகமது அலி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.தப்பி ஓடிய ....»

MudaliyarMatrimony_300x100px.gif