மதுரையில் 2 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை || Madurai ladies missing police investigation
Logo
சென்னை 22-11-2014 (சனிக்கிழமை)
  • டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடந்ந அனைத்து கட்சிகளுடன் இன்று சபாநாயகர் ஆலோசனை
  • சென்னையில் தொழிலதிபர் மனைவியை கொன்று 125 சவரன் நகை கொள்ளை
  • பாரிமுனையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி
மதுரையில் 2 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
மதுரையில் 2 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
மதுரை, ஜூலை. 11-

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆணைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது22). இவர் மதுரை நரிமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 20-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சரஸ்வதி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சு சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள புதுமீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் ஜெனிபர் (வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு பீ.பி.குளத்தில் உள்ள தொலைபேசி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெனிபர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெனிபரை தேடி வருகின்றனர்.

மாயமான 2 பெண்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது தானாகவே எங்கேனும் சென்றார்களா? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை