நித்யானந்தாவிடமிருந்து எனது மகனை மீட்டு தாருங்கள்: மதுரை கலெக்டரிடம் தந்தை மனு || Nithaynantha rescue son madurai collector father petition
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவ வீரர் காயம்
  • சான் பிரான்சிஸ்கோவை அடுத்து வாஷிங்டன்னுக்கும் நேரடி விமான சேவை: ஏர் இந்தியா அதிரடி
  • 2016-க்குள் இந்திய துறைமுகங்கள் ரூ.6 ஆயிரம் கோடி லாபத்தை ஈட்டும்: நிதின் கட்காரி
  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைந்தது டெல்லி
நித்யானந்தாவிடமிருந்து எனது மகனை மீட்டு தாருங்கள்: மதுரை கலெக்டரிடம் தந்தை மனு
நித்யானந்தாவிடமிருந்து எனது மகனை மீட்டு தாருங்கள்: மதுரை கலெக்டரிடம் தந்தை மனு
மதுரை, ஜூலை. 11-

மதுரை, சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் வாசிமுத்து (வயது24). பட்டதாரி ஆவார். கடந்த 2010-ம் ஆண்டு அவரது நண்பர் மூலம் பெங்களூரில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில் ஆசிரமத்தில் நடந்த பல்வேறு நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிரமத்தில் இருந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து நாங்கள் வாசிமுத்துவை அழைத்துவர பெங்களூர் பிடதி ஆசிரமத்திற்கு சென்று எனது மகனை சந்தித்தேன். அப்போது காலையில் வருவதாக கூறிவிட்டு எனது மகன் சென்று விட்டார். பின்னர் நித்யானந்தாவை சந்தித்து மகனை அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். முதலில் வருவதாக கூறிய வாசிமுத்து மறுநாள் எங்களுடன் வர மறுத்து விட்டார்.

எப்போதும் நித்யானந்தா பெயரை சொல்லிக்கொண்டு மயக்க நிலையில் காணப்படுகிறார். தற்போது அவர் மதுரை ஆதீன மடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே எனது மகனை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நித்யானந்தாவிடமிருந்து மகனை மீட்டுத்தரக்கோரி தந்தை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

MudaliyarMatrimony_300x100px.gif