குடியாத்தம் கள்ள காதலர்கள் மீது தாக்குதல்: லாரி டிரைவர் கைது || attack on illegal lovers in kudiyatham lorry driver arrested
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் பிரச்சனை குறித்து அரசு முடிவு செய்யும்: கல்ராஜ் மிஸ்ரா
  • முன்னாள் பிரதமரின் பேரன் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கம்
  • கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரெயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருப்பதாக தகவல்
  • நடிகர் சீரஞ்சீவி திடீர் கைது
குடியாத்தம் கள்ள காதலர்கள் மீது தாக்குதல்: லாரி டிரைவர் கைது
குடியாத்தம் கள்ள காதலர்கள் மீது தாக்குதல்: லாரி டிரைவர் கைது
குடியாத்தம், ஜூலை.11-
 
குடியாத்தம் தாழையாத்தம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா(வயது30) கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வசித்து வருகிறார்.
 
இவருக்கும் செவ்வங்கியை சேர்ந்த ரமேஷ் (வயது30) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தாழையாத்தில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.
 
கடந்த 1 மாதங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த பென்ஞ்சமின்(30) லாரி டிரைவர். விஜயாவின் வீட்டின் அருகே வாடகைக்கு வந்தார். அவர் அடிக்கடி விஜயாவின் வீட்டில் என்ன நடக்கிறது என எட்டிபார்ப்பது வழக்கமாம். இதனை பலமுறை விஜயா கண்டித்துள்ளார்.
 
நேற்று வழக்கம் போல் விஜயாவின் வீட்டை பென்ஞ்சமின் எட்டி பார்த்தார். இதனை தட்டி கேட்ட விஜயாவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பென்ஞ்சமின் விஜயாவை கையை பிடித்து மதுபாட்டிலால் தாக்கினார்.
 
சத்தம் கேட்ட ரமேஷ் வீட்டில் இருந்து வெளியே வந்து பென்ஞ்சமினை தடுக்க முயன்றார். அவருக்கும் பாட்டில் குத்து விழுந்தது.இதுகுறித்து அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி. சுந்தரம், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த விஜயா, ரமேஷ் ஆகியோரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
பின்னர் ரமேஷ் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பென்ஞ்சமின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததை கண்டித்து பலியானவர்களின் உடல்களுடன் போராட்டம்

4 பேர் பலியான சம்பவத்துக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாதுகாப்பு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif