வணிகர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய சில்லறை வர்த்தகத்தில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க நிறுவனம்: மத்திய அரசு தடுத்து நிறுத்துமா? || merchants against foreign direct investment central government
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
வணிகர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய சில்லறை வர்த்தகத்தில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க நிறுவனம்: மத்திய அரசு தடுத்து நிறுத்துமா?
வணிகர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய சில்லறை வர்த்தகத்தில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க நிறுவனம்: மத்திய அரசு தடுத்து நிறுத்துமா?
மும்பை, ஜூலை. 11-

கடந்த ஆண்டு இந்திய சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்ட பல்வேறு வணிகர் சங்க தலைவர்கள் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இந்தியா சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் இங்குள்ள வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே இங்குள்ள வணிகர்கள் நலன் கருதி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்ககூடாது என்று கூறினார்கள்.

மேலும் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களும் நடந்தன. அமெரிக்காவின் வால் மார்ட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சில்லறை வர்த்தகத்தை குறி வைத்து காய்நகர்த்தி வந்தது. இதன் காரணமாக மத்திய அரசும் படிப்படியாக இறங்கி வந்து வால்மார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட அனுமதி அளிக்க முன்வந்தது.

ஆனால் நாடு முழுவதும் வணிகர்கள் தொடர் போராட்டத்தில் குதித்ததால் சில்லறை வணிகத்தில் வால் மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை அனு மதிக்கவில்லை. இந்திய சில்லறை வணிகத்தில் நேரடியாக நுழைய தடை இருப்பதால் வால்மார்ட் நிறுவனம் தற்போது ரகசியமாக சில்லறை வணிகத்தில் நுழைந்திருக்கிறது.

வால் மார்ட் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள், சோப்பு, ஷாம்பு, தரையை கிளீன் செய்யும் ரசாயன பொருட்கள், டீ உள்பட ஏராளமான பொருட்களை தயாரித்து குறைந்த விலைக்கு விற்கிறது.

அவற்றில் 36 பொருட்களை இந்திய சில்லறை வர்த்தகத்தில் களம் இறக்கியுள்ளது. மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாரதி எண்டர்பிரைசஸ் என்ற இந்திய நிறுவனத்துடன் வால்மார்ட் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பாரதி எண்டர்பிரைசஸ் மூலம் விற்பனை செய்து வருகிறது. வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகர்களை தன்வசப்படுத்த பொருள் ஒன்றுக்கு 30 சதவீதம் வரை கமிஷன் வழங்குகிறது. இதன்மூலம் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை பெருமளவில் குறைத்துவிட முடியும் என்று வால்மார்ட் நிறுவன நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

வால்மார்ட் நிறுவன பொருட்கள் விற்பனை அதிகரித்தபின் சில்லறை வணிகர்களுக்கு கமிஷன் குறைத்து விடலாம் என்றும், இப்போதைக்கு இந்திய சில்லறை வணிகத்தில் பலமாக கால்பதிக்க வேண்டும் என்பதே வால்மார்ட்டின் திட்டம் என்று போபாலை சேர்ந்த சில்லறை வியாபாரி மோதிலால் ஜெயின் தெரிவித்தார்.

இந்திய சில்லறை வணிகத்தை அழிக்கத் துடிக்கும் வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவன பொருட்களின் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வணிகர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வால்மார்ட் நிறுவன பொருட்களை ரகசியமாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதித்திருக்ககூடாது. அந்நிறுவன பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 26–ந் தேதி தேநீர் விருந்து

புதுடெல்லி, அக்.23 மராட்டியம் மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif