ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: தே.மு.தி.க.வுக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி || vice president election avoid dmdk party oppose petition reject high court
Logo
சென்னை 04-08-2015 (செவ்வாய்க்கிழமை)
ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: தே.மு.தி.க.வுக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு:
தே.மு.தி.க.வுக்கு எதிரான மனு
ஐகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை, ஜூலை. 11-

சென்னையை சேர்ந்த ஏ.பி.ஜெயராமன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 19-ந்தேதி அறிவித்து உள்ளார். இதேபோல இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழுவும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து அறிவித்து உள்ளது. இந்த இரு கட்சிகளும் சட்டப்பூர்வ கடமையாற்றுவதில் இருந்து தவறி உள்ளன.

தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் அவர்களது செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரும் போராட்டம் தீவிரம்: அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

சென்னை, ஆக. 4–காந்தியவாதி சசி பெருமாள் மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ....»

MM-TRC-B.gif