வழக்கை வாபஸ் பெறும்படி நடிகர் மகத்துக்கு மிரட்டல்:முக்கிய பிரமுகர் நெருக்கடியால் போலீஸ் விசாரணை பாதிப்பு || threaten to acot mahat enquiry affect
Logo
சென்னை 15-09-2014 (திங்கட்கிழமை)
  • ஈரோடு: பவானி அடுத்த தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் தீ விபத்து
  • சென்னை: கலைஞர் அரங்கில் திமுக சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா
  • பூந்தமல்லியில் இன்று வைகோ தலைமையில் மதிமுக மாநாடு
  • சீன அதிபர் இந்தியா வருகை குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம்
வழக்கை வாபஸ் பெறும்படி நடிகர் மகத்துக்கு மிரட்டல்:முக்கிய பிரமுகர் நெருக்கடியால் போலீஸ் விசாரணை பாதிப்பு
வழக்கை வாபஸ் பெறும்படி நடிகர் மகத்துக்கு மிரட்டல்:முக்கிய பிரமுகர் நெருக்கடியால் போலீஸ் விசாரணை பாதிப்பு
சென்னையில் நடந்த நடிகர்-நடிகைகள் மது விருந்தில் 'மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்ததாக கூறப்பட்டது. மகத் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வயிற்றிலும், தொண்டையிலும் மனோஜும் அவரது நண்பர்களும் பல நிமிடங்கள் தன்னை தொடர்ந்து குத்தியதாக மகத் கூறினார். நான் உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்றும் தெரிவித்தார்.
 
நடிகை டாப்சியே இந்த தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது.  மகத்தும் மனோஜும்  டாப்சியை காதலித்தனர். முதலில் மகத்துடன்தான் டாப்சி சுற்றினார். பிறகு  மனோஜுடன்  நெருக்கமானார். மனோஜும்  டாப்சியும் தனி வீட்டில் குடித்தனம் நடத்துவதாக ஆந்திர பத்திரிகைகளில் சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன.அதனை இருவரும் மறுத்தார்கள்.
 
தற்போது தன்னை பிரிந்து போனதால் டாப்சி மீது மகத் கோபமாக இருந்ததாகவும் அவரை   அடிக்கடி தொடர்பு  கொண்டு டார்ச்சர் செய்ததாகவும் அந்த ஆத்திரத்தில் தான் மகத்தை மனோஜ் அடித்து உதைத்தார் என்றும் செய்திகள் பரவியது.
 
இவர்கள் மோதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டாப்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். இரு வரையும் காதலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் மகத்தை தாக்கிய மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீசார்  தீவிரமானார்கள். மது விருந்து நடத்திய தொழில் அதிபர் பிரதாப் தானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசாரை தடுத்த அவரது வீட்டின் காவலாளி கைது செய்யப்பட்டு  உள்ளார்.
 
மனோஜுடம்  விசாரணை நடத்தி கைது செய்ய ஆந்திராவுக்கு தனிப்படை போலீசை  அனுப்பவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் மனோஜ் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டார்.
 
இதற்கிடையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தலையிட்டு போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்த வேண்டாம் என்று வழக்கை கைவிடுங்கள் என்று அவர்கள் நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.
 
மகத்திடமும் புகாரை வாபஸ் பெரும்படி சிலர் மிரட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். மகத் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரிய வில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் செல்போனை சுவிட்ஆப் செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
 
மது விருந்தில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் யார் என்ற விவரங்களை சேகரித்து  அவர்களிடம் விசாரணை  நடத்தவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.         
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்