சென்னையில் கூடுதலாக 16 புதிய பணிமனைகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு || additional 16 workstations in chennai minister senthil balaji inspection
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
சென்னையில் கூடுதலாக 16 புதிய பணிமனைகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு
சென்னையில் கூடுதலாக 16 புதிய பணிமனைகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு
சென்னை, ஜூலை. 11-
 
சென்னையில் தினமும் மாநகர போக்குவரத்து கழகத்தால் 3,500 பஸ்கள், 800 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதில் 275 பஸ்கள் உபரி பஸ்களாக உள்ளன. தினமும் 42,961 பயண நடைகளை இயக்குவதன் மூலம் 60 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
 
பஸ் வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கும் பஸ் வசதி அளிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பேரில் 100 மினி பஸ்களை இயக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
3,500 பஸ்களை பராமரிக்க சென்னையில் மொத்தம் 25 பஸ் டெப்போதான் (பணிமனை) உள்ளது. அனைத்து பஸ்களையும் பணிமனைக்குள் நிறுத்த முடியாத நிலை உள்ளதால் நிறைய பஸ்கள் பணிமனைக்கு வெளியேதான் நிறுத்தப்படுகின்றன.
 
இதனால் உடனுக்குடன் பஸ்களை ரிப்பேர் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதையறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூடுதலாக பணிமனைகளை உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
 
இதன்படி மறைமலைநகர், திருவேற்காடு, பாடியநல்லூர், தையூர், கண்ணகிநகர், பெசன்டநகர், பெரும்பாக்கம், பெரியபாளையம், செம்மஞ்சேரி, குன்றத்தூர், வேளச்சேரி, கோவளம், முல்லைநகர், அருமந்தை, கள்ளிக்குப்பம், குரோம்பேட்டை உள்பட 16 இடங்களில் புதிய பணிமனை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
இவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதுதவிர நகரில் உள்ள பணிமனைகளுக்கும் சென்று திடீர் ஆய்வு மேற் கொண்டார். தண்டையார்பேட்டை பணிமனைக்கு சென்ற செந்தில்பாலாஜி அங்கு டயர் புதுப்பிக்கும் பிரிவை சென்று பார்வையிட்டார்.தினமும் எத்தனை பஸ்கள் பழுது பார்க்கப்படுகின்றன. தேவையான உதிரிபாகங்கள் உள்ளதா என்றும் விசாரித்தார்.
 
சராசரியாக ஒரு பணி மனைக்கு 100 பஸ்களை நிறுத்தத்தான் இடம் உள்ளது. ஆனால் 200 பஸ்களுக்கு மேல் பணிமனையில் நிற்பதால் உடனே பஸ்களை பழுது பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாக ஊழியர்கள் கூறினார்கள்.
 
கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக ஒரு பணிமனைகூட உருவாக்கவில்லை என்றும் கூறினார்கள். அவர்களிடம் செந்தில் பாலாஜி கூறுகையில் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி அம்மா உத்தரவுப்படி சென்னையில் கூடுதலாக 16 இடங்களில் புதிதாக பணிமனை உருவாக்கப்படுகிறது.
 
எனவே இனிமேல் பஸ்களை பழுது பார்க்க, பராமரிக்க தேவையான வசதி கிடைக்கும் என்றார்.மொத்தம் 25 பணிமனை இருப்பதை 50 பணிமனை வரை அதிகரிக்க புரட்சித்தலைவி அம்மா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இதற்காக ஒவ்வொரு பணிமனையும் சராசரியாக ரூ.75 லட்சம் உருவாக்கப்பட்டு வருவதாகவுத் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இலங்கை பிரதமருடன் சுஷ்மா சந்திப்பு: தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் பிரச்சினை, தீராத பிரச்சினையாக உள்ளது. அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறபோது, எல்லை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif