இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் புகார் || Hindus attack mps petition pakistan parliament
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் புகார்
இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் புகார்
இஸ்லாமாபாத், ஜூலை. 11-

பாகிஸ்தானில் மைனாரிட்டியாக உள்ள இந்து எம்.பி.க் கள் தர்ஷன்பன்ஷி, லால்சந்த், மான்வர்லால் ஆகியோர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ், ஷதாத்காட், மிர்புர் மதெலோ ஆகிய இடங்களில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்துக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்படுகின்றனர்.

மிர்புர் மதெலோ என்ற இடத்தில் குல்க பகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டில் இருந்து மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என்றார். பிரதான எதிர்க்கட்சியான பி.எம்.எல்.என் கட்சியின் எம்.பி. கூறும்போது அப் பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகள் ஆக்கிர மிக்கப்படுகின்றன. கட்டாயப்படுத்தி அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அந்த நபர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

எனவே, அரசு இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மைனாரிட்டி மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

நேபாளத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பலி- 30 பேர் படுகாயம்

நேபாள நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையில் இன்று இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் ....»