அகில இந்திய கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி. வருமானவரி அணிகள் வெற்றி || all india volley ball match sdad won
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
அகில இந்திய கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி.-வருமானவரி அணிகள் வெற்றி
அகில இந்திய கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி.-வருமானவரி அணிகள் வெற்றி
சென்னை, ஜூலை. 11-
 
செய்ல் மற்றும் பனிமலர்-பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 
 
ஆண்கள் ஏ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி அணி 25-10, 25-21, 25-17 என்ற நேர்செட் கணக்கில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது. இது எஸ்.டி.ஏ.டி. பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி.யிடம் தோற்று இருந்தது.இதேபோல சுங்க இலாகா முதல் தோல்வியை தழுவியது.
 
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பனிமலர் 3-1 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் அணியை வென்றது. பனிமலர் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கேரளா போலீசிடம் தோற்றது. இந்திய ஜூனியர் அணிய முதல் தோல்வியை தழுவியது. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி 25-20, 19-25, 22-25, 25-21, 15-10 என்ற செட்கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.
 
இன்னொரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 3-0 என்ற கணக்கில் இந்திய இளைஞர் அணியை வீழ்த்தியது.
 
பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே 3-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும், கேரள மின்சார வாரியம் 3-0 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் அணியையும் தோற்கடித்தன.
 
இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் கேரளா போலீஸ்- வருமானவரி, தமிழ்நாடு போலீஸ்-பனிமலர், ஐ.ஓ.பி-சுங்க இலாகா, தெற்கு ரெயில்வே-எஸ்.டி.ஏ.டி அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் மத்திய ரெயில்வே- டாக்டர் சிவந்தி கிளப், தெற்கு ரெயில்வே-கேரள மின்சார வாரியம் அணிகள் மோதுகின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு: சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif