மனைவி புகார் எதிரொலி: அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் கைது || young man arrested for illegal love
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
மனைவி புகார் எதிரொலி: அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் கைது
மனைவி புகார் எதிரொலி: அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் கைது
அரக்கோணம், ஜூலை.11-
 
வேலூர் மாவட்டம், அரக்கோணம்-மோசூர் ரோடு மரகதம் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது29). இவரது மனைவி ஷாலினி (22). அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷாலினி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.   அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
எனக்கு (ஷாலினி) 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் ராஜேஷ் பி.இ. படித்திருப்பதாகவும், ரெயில்வே துறையில் நிரந்தர வேலை பார்ப்பதாகவும் கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்த கொண்டார். ஆனால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 
நாங்கள் வசிக்கும் வீட்டிலேயே ராஜேஷ் அண்ணன் ரஞ்சித்குமார் (30), அவரது மனைவி பொன்மொழி (27) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தோம். எனது கணவர் ராஜேஷ் அண்ணி பொன்மொழியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை நான் நேரில் பார்த்து விட்டேன்.
 
இதுகுறித்து கேட்ட போது என்னை ஆபாச வார்த்தை கூறி ராஜேஷ், ரஞ்சித்குமார், பொன்மொழி ஆகியோர் அடித்து உதைத்து தாக்கினார்கள். உன் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் ரூபாய் வாங்கி வந்தால்தான் இந்த வீட்டில் வாழ முடியும் என விரட்டி விட்டார்கள்.
 
நான் கடந்த 5 மாதங்களாக பல்லாவரத்தில் உள்ள எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவருக்கு திருமணத்தின் போது 5 பவுன் பிரேஸ்லெட் செய்து போட்டார்கள். மேலும் எனது வீட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார்கள். எனக்கு 25 பவுன் நகையும் சீர்வரிசையும் கொடுத்தனர்.
 
இவ்வளவு வசதியாக செய்து கொடுத்தும் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை.மேலும் எனதுகணவர் பேரிலும், எனதுபோரிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையும் எனது குடும்பத்தார் வாங்கி கொடுத்தனர். தற்போது நான் எனது கணவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
 
எங்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. எனது கணவரின் வரதட்சணை கொடுமை மற்றும் ஒழுங்கீனமான செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
 
இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி, ராஜேஷ், ரஞ்சித்குமார், பொன்மொழி, ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைதுசெய்தனர். அவரை அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜேஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif