தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு || south african cricketer boucher retires
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
லண்டன், ஜூலை.11-

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முன்னதாக அங்குள்ள கவுண்டி அணியான சோமர்செட் அணிக்கு எதிராக டவுன்டானில் நடந்த இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா விளையாடியது.

இந்த ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்காவின் மூத்த விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் வீசிய பந்து, கிளீன் போல்ட் ஆக்கிய போது ஸ்டம்பில் இருந்த `பெய்ல்' பறந்து விக்கெட் கீப்பர் பவுச்சரின் இடது கண்ணை பலமாக தாக்கியது. இதனால் கண்ணில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

35 வயதான பவுச்சர் இங்கிலாந்து தொடரே தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். உலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பரான அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய மூன்று சர்வதேச போட்டியையும் சேர்த்து இதுவரை 999 பேரை (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். இன்னும் ஒரு வீரரை அவுட் செய்தால் அது புதிய மைல்கல்லாக அமையும்.

இந்த நிலையில் எதிர்பாராத காயத்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தென்ஆப்பிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முகமது மூசஜி கூறுகையில்:

பவுச்சரின் கண்ணில் ஏற்பட்ட காயம் கடுமையாக உள்ளது. இதற்காக அவருக்கு 3 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. அவரது கருவிழி ஆபரேஷன் மூலம் சரி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் எவ்வளவு காலம் சிகிச்சை நீடிக்கும் என்பதை இப்போது எதுவும் கூற முடியாது. இந்த தொடரில் அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக புதிய விக்கெட் கீப்பர் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பவுச்சர் அறிவித்தார். அவரது சார்பாக அவரது அறிக்கையை சுமித் வாசித்தார். அந்த அறிக்கையில்:

மிகுந்த மனவேதனையோடு ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். எனது கண்ணில் ஏற்பட்ட காயம் கடுமையாக இருப்பதால் என்னால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாட இயலாது. இந்த தொடருக்காக நான் நன்றாக தயாராகி இருந்தேன். தொடருக்கு முன்பாவே ஓய்வு குறித்து அறிவிப்பேன் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. சூழ்நிலை வேறு மாதிரி அமைந்து விட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் நான் குணமடைய பிரார்த்திர்த்த அனைத்த உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தென்ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எனது காயம் முழுமையாக குணமடையாமலேயே நான் தாயகம் திரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அவருக்கு டெஸ்ட் கேப்டன் சுமித் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில்:

14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் தென் ஆப்பிரிக்காவின் உண்மையான வீரனாக இருந்தீர்கள். ஒரு போர்வீரன் போல் எதுவும் கேட்காமல் நாட்டுக்காக 100 சதவீத பங்களிப்பை அளித்தீர்கள் என்று பாராட்டினார்.

திடீர் ஓய்வால் பவுச்சரின் `வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த சாதனை' 999-லேயே நின்று போய் விட்டது. பவுச்சர் 147 டெஸ்டில் விளையாடி 532 கேட்ச் மற்றும் 23 ஸ்டம்பிங் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 கேட்ச் செய்த ஒரே விக்கெட் கீப்பர் இவர் தான். இவருக்கு அடுத்தபடியாக உள்ள ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 379 கேட்ச் செய்துள்ளார். பவுச்சர் டெஸ்டில் 5 சதம் உள்பட 5515 ரன்களும் குவித்துள்ளார்.

இதே போல் ஒரு நாள் போட்டியில் 295 ஆட்டங்களில் ஆடி 4686 ரன்கள் எடுத்திருக்கிறார். 25 இருபது ஓவர் போட்டியிலும் சர்வதேச விளையாடியுள்ளார். 1997-ம் ஆண்டு சர்வதேச கிக்கெட்டுக்குள் நுழைந்த பவுச்சரின் கிரிக்கெட் வாழ்க்கை நேற்று துரதிர்ஷ்டவசமாக முடிவுக்கு வந்தது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரு நகரங்களில் நடந்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif