மலேசியாவில் மன்னார்குடி பெண் தூக்கு போட்டு தற்கொலை || mannarkudi women suicide in malaysia
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
மலேசியாவில் மன்னார்குடி பெண் தூக்கு போட்டு தற்கொலை
மலேசியாவில் மன்னார்குடி
பெண் தூக்கு போட்டு தற்கொலை
மன்னார்குடி, ஜூலை.11-
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஒன்றியம் சித்த மல்லியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி புளோரா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் 2008-ம் ஆண்டு மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூரில் பரமசாரதி நாயுடு வீட்டில் வேலை செய்வதற்காக புளோரா சென்றார். அதன்பின் ஒரு முறை கூட அவர் இந்தியா வந்ததில்லை. போனில் மட்டுமே குடும்பத்தினருடன் பேசி வந்தார்.கடந்த 8-ந்தேதி இரவு வழக்கம் போல் கணவர், குழந்தைகளுடன் போனில் பேசினார்.
 
இந்நிலையில் புளோரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இந்திய தூதரகம் மூலம் சேகருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பரமசாரதி நாயுடுவை போனில் தொடர்பு கொண்டு சேகர் விசாரித்தார். அப்போது பரமசாரதி நாயுடு நாங்கள் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தோம்.
 
திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றோம். புளோரா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து புளோராவின் கணவர் சேகர் கூறியதாவது:-
 
கடந்த 8-ந்தேதி மனைவி புளோரா மகிழ்ச்சியாகவே எங்களிடம் பேசினார். எங்கள் குடும்பத்தில் எந்த தகராறும் இல்லை. இந்நிலையில் புளோரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவதை நம்ப முடியவில்லை.
 
இந்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. புளோராவின் சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் ஆய்வுக்குழு முழுமையாக பார்வையிட வேண்டும்: வாசன்

சென்னை, நவ. 26–தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–மத்திய அரசின் ....»