அமெரிக்கா கோர்ட்டில் தண்டனை பெற்றால் நித்யானந்தா நீக்கப்படுவார்: மதுரை ஆதீனம் பேட்டி || madurai aadheenam interivew america court punishment nithiyanantha
Logo
சென்னை 05-08-2015 (புதன்கிழமை)
  • என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் 1-வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
  • ஹர்டாவில் 2 ரெயில் தடம் புரண்ட விபத்தில் 20 பேர் உயிரிழப்பு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
அமெரிக்கா கோர்ட்டில் தண்டனை பெற்றால் நித்யானந்தா நீக்கப்படுவார்: மதுரை ஆதீனம் பேட்டி
அமெரிக்கா கோர்ட்டில் தண்டனை பெற்றால் நித்யானந்தா நீக்கப்படுவார்:
மதுரை ஆதீனம் பேட்டி
சென்னை, ஜூலை 11-

மதுரை ஆதீனம் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் நித்யானந்தாவின் பிடியில் சிக்கி இருப்பதாக சொல்லப்படுவது கற்பனை. என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். என்னை அவர் வசியம் செய்யவில்லை. வசிய மைகள் என்னை நெருங்காது. வசியம் செய்யவும் முடியாது. எனக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

நித்யானந்தாவோடு நான் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் எல்லோரும் அவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றியே கேட்கிறார்கள். அப்போது எனக்கு சங்கடமாக இருக்கும். அதனால்தான் அவரோடு உங்களை சந்திக்கும் போது உற்சாகமாக நான் இருக்க முடியவில்லை.

இளைய ஆதீனத்தை தேர்வு செய்வது குறித்து என்னைத் தவிர யாரும் முடிவு எடுக்க முடியாது. வேறு யாரும் தலையிடவும் கூடாது. நித்யானந்தா நியமனத்தில் ஆதீன மரபுகள் ஒரு போதும் மீறப்படவில்லை. அவருக்கு முறைப்படி தீட்சை கொடுத்து தான் இளைய ஆதீனமாக நியமித்தேன். மற்ற ஆதீனங்கள் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் ஆலோசிக்க வரும்படி என்னை அழைத்தனர். நான் நித்யானந்தாவுடன் தான் வருவேன் என்று சொன்னதால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

பல ஆதீனங்களுக்கு பிரச்சினைகள் வந்த போது அவர்களுக்கு நான் ஆலோசனைகள் வழங்கி இருக்கிறேன். நானும் பல ஆதீனங்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறேன். நித்யானந்தா பிரச்சினையால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. ஆதீனத்தில் புலித்தோல் இருக்கிறது, மான் தோல் இருக்கிறது, யானைத்தந்தம் இருக்கிறது என்று கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். கோர்ட்டு உத்தரவால் ஆசிரமத்துக்குள் போலீஸ் நுழைந்தது. ஆனால் சோதனையில் எதையும் எடுக்கவில்லை. மரகத லிங்கம் இருந்தாக சொல்வதும் கற்பனை.

நித்யானந்தா கொடைக்கானலில் இருக்கிறார். அவர் திரும்பி வந்தாலும் இதே உற்சாகத்துடன்தான் இருப்பேன். அவர் மீது உள்ள பாலின புகார் வழக்குகளை அவரே சந்தித்துக் கொள்வார். இதில் ஆதீனம் தலையிடாது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் அவர் மீது போடப்பட்ட மோசடி வழக்கில் ஜூலை 19-ந்தேதி தீர்ப்பு வரும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், அவரை நீக்குவது பற்றி முடிவு செய்து அறிவிப்பேன். ஏன் என்றால் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் இளைய ஆதீனம் பதவியில் தொடர முடியாது. ஆகவே, எந்த முடிவுக்கும் நான் தயங்க மாட்டேன்.

இவ்வாறு மதுரை ஆதீனம் பேட்டியில் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஏமனில் முக்கிய விமானதளத்தை கைப்பற்றியது சவுதி ஆதரவு அரசு படைகள்

ஏமன் சண்டையில் முக்கிய திருப்பமாக கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த அல்-அனாத் விமானதளத்தை அரசு ஆதரவுப் படையினர் செவ்வாய்க் ....»

MM-TRC-B.gif