நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு || kidnaping child rescue in namakkal
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
நாமக்கல், ஜூலை. 11-
 
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழ்சாந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி அன்புலட்சுமி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 8-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
 
இதையடுத்து அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். இரவில் அறுவை சிகிச்சை மூலம் அன்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் அன்புலட்சுமியை சதீஸ்குமாரின் தாயார் முத்துலட்சுமி (55) உடன் இருந்து கவனித்து வந்தார்.
 
பிரசவ வார்டில் முதல் படுக்கை அறையில் அன்புலட்சுமி அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மாலை 6 மணியளவில் பச்சை நிற சுடிதார் அணிந்து கொண்டு டிப்-டாப்பாக ஒரு இளம்பெண் முத்துலட்சுமியிடம் வந்தார். பின்னர் அவர் தன்னை ஆஸ்பத்திரியில் வேலைப்பார்க்கும் ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
 
மேலும் முத்துலட்சுமியிடம் அந்த பெண், உங்கள் பேத்திக்கு பிரசவம் பார்த்த டாக்டருக்கு இன்று பிறந்தநாள் எனவே குழந்தைக்கு ஏதாவது பரிசு பொருள் கொடுப்பார்கள், எனவே குழந்தையை என்னிடம் தாருங்கள். நான் போய் வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
 
இதை உண்மை என்று நம்பிய முத்துலட்சுமி குழந்தையை ஒரு வெள்ளை துணியில் சுற்றி அந்த டிப்-டாப் பெண்ணிடம் கொடுத்தார். மேலும் முத்துலட்சுமியும் சிறிது தூரம் அவருடன் நடந்து சென்றார். அப்போது அந்த டிப்டாப் பெண் நீங்கள் இங்கேயே இருங்கள் நான் போய் வாங்கி வருகிறேன் என கூறி விட்டு பிரசவ வார்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.  
 
குழந்தையுடன் சென்ற பெண் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அந்த பெண்ணை ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் அந்த பெண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
 
இதையடுத்து பதறிதுடித்த முத்துலட்சுமி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இதுப்பற்றி கூறி கதறிஅழுதார். இதுப்பற்றி குழந்தையின் தாய்க்கு தெரியவந்ததும் மயக்கம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து நாமக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
 
இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது முத்துலட்சுமி கூறிய நேரத்தை மையமாக வைத்து அதில் பதிவானவீடியோவை போட்டு பார்த்தனர். அப்போது அந்த டிப்-டாப் பெண் குழந்தையுடன் சென்றது பதிவாகி இருந்தது.
 
இதை போலீசார் முத்துலட்சுமியிடம் காட்டினர். அவரும் அந்த பெண் தான் என்று அடையாளம் காட்டினார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்.ஐ.கலையரசி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.அவர்கள் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதிகளிலும் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தேடினார்கள்.
 
இந்த நிலையில் நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்த ஒரு பெண் குழந்தையுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு கடத்தப்பட்ட குழந்தையுடன் இருந்த சேகர் என்பவரது மனைவி சுமதி (வயது25) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர்.
 
போலீசாரிடம் சுமதி கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த 6 வருடமாக எனக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை ஏக்கத்தில் இருந்த நான் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை நைசாக திருடி சென்றேன். ஆனால் எப்படியோ நான் இங்கு இருப்பதை அறிந்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
 
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுமதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்து உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையை அதன் தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை வாஞ்சையுடன் தாய் அன்புலட்சுமி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும் குழந்தையின் பாட்டி முத்துலட்சுமியும் தொலைந்து போன பெண் குழந்தை புதன்கிழமை அன்று கிடைத்து விட்டதே என்று மகிழ்ச்சி அடைந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு

கலைஞர் டி.வி.க்கு 200 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ....»