கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 கூடுதல் வருவாய் கிராமங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு || jayalalitha announces more revenue villages in kanyakumari ditrict
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 கூடுதல் வருவாய் கிராமங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 கூடுதல் வருவாய் கிராமங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூலை 11-

கட்டுக்கோப்பான சமுதாய முன்னேற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் துறையாகவும் அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியக் கருவியாகவும் வருவாய் துறை செயல்படுகிறது. நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த துறை மக்கள் பணியை திறம்பட செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 81 வருவாய் கிராமங்களில், சில கிராமங்களில், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் இருக்கிறது. 1684 சதுர கிலோ மீட்டர் மொத்த பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி 1106 ஆக உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களின் பரப்பளவு, இதர மாவட்டங்களில் உள்ள வருவாய் கிராமங்களின் பரப்பளவினை ஒப்பிடும் பொழுது அதிகமாக இருக்கிறது. இதனால் பல வருவாய் கிராமங்களின் மக்கள் தொகை 30 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.

இங்குள்ள மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. மேலும், வருவாய் கிராமத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களால் தங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளை முழுமையாக கண்காணிக்க இயலாத நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், வருவாய் கிராமங்களை பிரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி,  இம்மாவட்டத்தில் தற்போது உள்ள நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்கள் மற்றும் பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கல்குளம், விளவங்கோடு வட்டங்கள் ஆகியவற்றில் உள்ள 81 வருவாய் கிராமங்கள் சீரமைக்கப்படும். இந்த சீரமைப்பின்படி புதியதாக 107 வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் 188 வருவாய் கிராமங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 107 வருவாய் கிராமங்களில் பணிபுரிய 107 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 107 கிராம உதவியாளர் பணியிடங்களை தோற்றுவிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு தொடரும் செலவினமாக ஆண்டொன்றுக்கு 2 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 488 ரூபாயும், தொடரா செலவினமாக 5 கோடியே 60 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும் ஏற்படும் என கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif