தென்மாநிலங்களை இணைத்து 'தட்சிண பிரதேசம்' அமைக்க மத்திய அரசு முயற்சி || central government try to south state join
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
தென்மாநிலங்களை இணைத்து 'தட்சிண பிரதேசம்' அமைக்க மத்திய அரசு முயற்சி
தென்மாநிலங்களை இணைத்து 'தட்சிண பிரதேசம்' அமைக்க மத்திய அரசு முயற்சி
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டு வந்த நேரத்தில், மேற்கு வங்காள முதல்-அமைச்சராக இருந்த டாக்டர் பி.சி.ராய் ஒரு யோசனையை வெளியிட்டார்.
 
'மொழி அடிப்படையில் சிறிய மாநிலங்களை அமைப்பதற்கு பதிலாக, இந்தியா முழுவதையும் ஐந்து அல்லது ஆறு பெரிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இதனால், மாநில அரசுகள் பலம் உள்ளவையாக இருக்கும்' என்பதே அவருடைய யோசனை.
 
மேற்கு வங்காளத்தையும், பீகாரையும் ஒரே மாநிலமாக அமைக்கலாம் என்று அவர் கூறினார். இதற்கு, பீகார் முதல்-மந்திரியும் ஆதரவு தெரிவித்தார்.
 
தட்சிண பிரதேசம்
 
தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய 'தட்சிண பிரதேசம்' அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
 
காங்கிரஸ் ஆதரவு
 
பெரிய மாநிலங்கள் அமைப்பது பற்றி, 1956-ம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. டாக்டர் பி.சி.ராய் வெளியிட்ட திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று அன்றைய மத்திய உள்துறை மந்திரி கோவிந்த வல்லப் பந்த் தீர்மானம் கொண்டு வந்தார்.
 
தீர்மானத்தை வழிமொழிந்து சி.சுப்பிரமணியம் பேசினார். தீர்மானம் நிறைவேறியது. பின்னர், கர்நாடக, கேரள முதல்_மந்திரிகளுடன் சி.சுப்பிரமணியம் இதுபற்றிப் பேச்சு நடத்தினார். 'தட்சிணப் பிரதேசம் அமைக்கப்பட்டால் காமராஜர் முதல்_மந்திரியாக இருக்கவேண்டும்' என்று கூறி, அதற்கு அந்த இரு முதல்வர்களின் ஒப்புதலைப் பெற்றார்.
 
தி.மு.க. எதிர்ப்பு
 
'தட்சிண பிரதேசம் அமைக்கும் யோசனைக்கு தி.மு.கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 'நீங்கள் கேட்கும் திராவிட நாடுதானே தட்சிண பிரதேசம்! அப்படி இருக்க, ஏன் எதிர்க்கிறீர்கள்?' என்று அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டார். 'நான் கேட்பது இட்லி. தட்சிணபிரதேசம் வெறும் மண் இட்லி' என்று அண்ணா பதிலளித்தார்.
 
பெரியார் தந்தி
 
'இந்தச் சமயத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரிடமிருந்து, காமராஜருக்கு ஒரு தந்தி வந்தது. தட்சிணப் பிரதேசம் அமைக்கப்பட்டால், இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்கள் தலைமைக்கு ஆபத்து ஏற்படும். எனவே, தட்சிணப் பிரதேசம் அமைக்க சம்மதிக்காதீர்கள்' என்று அந்தத் தந்தியில் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.
 
இதைத்தொடர்ந்து, 'தட்சிணப் பிரதேச யோசனையை நான் ஆதரிக்கவில்லை' என்று காமராஜர் அறிவித்தார்.
 
நேருவின் கருத்து
 
பெரிய மாநிலங்கள் அமைக்கும் திட்டத்தில், பிரதமர் நேரு ஆர்வம் காட்டவில்லை. 'முதல்_மந்திரிகள் மீது எந்த முடிவையும் திணிக்க நான் விரும்பவில்லை. தட்சிணப் பிரதேசத்திட்டத்தை காமராஜர் ஏற்கவில்லை என்றால், அந்தத் திட்டத்தை கைவிட்டு விடுவதே சிறந்தது' என்று கூறிவிட்டார்.
 
அத்துடன் 'தட்சிணப் பிரதேசம்' அமைக்கும் யோசனை கைவிடப்பட்டது.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif