இந்தியா விலைக்கு வாங்கியதால் லண்டனில் நடைபெற இருந்த காந்தியின் கடிதங்கள் ஏலம் ரத்து || auction of gandhi letters cancelled
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இந்தியா விலைக்கு வாங்கியதால் லண்டனில் நடைபெற இருந்த காந்தியின் கடிதங்கள் ஏலம் ரத்து
இந்தியா விலைக்கு வாங்கியதால் லண்டனில் நடைபெற இருந்த காந்தியின் கடிதங்கள் ஏலம் ரத்து
லண்டன், ஜூலை 11-

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், லண்டனில் உள்ள பிரபலமான சூத்பி ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட இருந்தன. இந்த ஏலம், நேற்று நடைபெறுவதாக இருந்தது. காந்தியின் கடிதங்களில், அவர் தென்ஆப்பிரிக்காவில் வசித்தபோது அவருடைய நண்பராக இருந்த ஹெர்மன் கல்லன்பச் என்பவருடனான சர்ச்சைக்குரிய நட்புறவு தொடர்பான கடிதங்களும் அடங்கும்.

இந்த கடிதங்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று சூத்பி ஏல நிறுவனம் கருதி இருந்தது. இருப்பினும், அந்த கடித தொகுப்புகளை இந்திய அரசு விலைக்கு வாங்க நினைத்தது. அதன்படி, இந்திய கலாச்சார துறை அமைச்சகத்தை சேர்ந்த நிபுணர் குழுவினர் சமீபத்தில் அந்த கடித தொகுப்புகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில், அந்த கடிதங்கள் நன்றாக பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பில்லாத சொத்துகள் என்று நிபுணர் குழு கருத்து தெரிவித்தது. அவை வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அரிய பொக்கிஷமாக திகழ்வதாகவும் நிபுணர் குழு கூறியது. இதையடுத்து, இந்திய அரசு, காந்தியின் கடித தொகுப்புகளை விலை கொடுத்து வாங்கி உள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கலாச்சார துறை அமைச்சகத்துக்கும், ஏல நிறுவனத்துக்கும் இடையே கடந்த 6-ந் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தகவலை சூத்பி ஏல நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. காந்தியின் கடித, ஆவண தொகுப்புகள் இந்திய அரசுக்கு விற்கப்பட்டு விட்டதால், நேற்று நடைபெறுவதாக இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக சூத்பி நிறுவனம் அறிவித்தது.

அதே சமயத்தில், இந்திய அரசு எத்தனை ரூபாய்க்கு அந்த கடித தொகுப்பை விலைக்கு வாங்கியது என்ற விவரத்தை சூத்பி ஏல நிறுவனம் வெளியிடவில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீண்டும் அபாண்டம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கடந்த வாரம் ....»

VanniarMatrimony_300x100px_2.gif