சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெலிவிஷன் வசதி || chennai bangalore sathapthi express train television facility
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
சென்னை-பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெலிவிஷன் வசதி
சென்னை-பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெலிவிஷன் வசதி
பெங்களூர், ஜூலை.11-
 
பொதுவாக பஸ்களில் பயணிகள் நீண்ட தூர பயணம் செய்யும்போது, அவர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்க டி.வி. வசதி செய்யப்பட்டு இருப்பது உண்டு. ஆனால், ரெயில்களில் இந்த வசதி கிடையாது. தற்போது ரெயில் பயணிகளுக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
 
சென்னை-பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டி.வி. வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. மத்திய ரெயில்வே இணை மந்திரி கே.எச்.முனியப்பா கலந்து கொண்டு, பெங்களூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் டெலிவிஷனை இயக்கி தொடங்கி வைத்தார். அதன்பிறகு கே.எச்.முனியப்பா பேசியதாவது:-
 
இந்த டெலிவிஷன் வசதி மூலம் ரெயில் எங்கிருந்து புறப்படுகிறது, எந்த இடத்துக்கு செல்கிறது, எவ்வளவு நேரத்தில் எந்த ரெயில் நிலையத்துக்கு செல்லும் என்பன போன்ற விவரங்கள் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். மேலும் டி.வி.யில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாது. 
 
சென்னை-பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ், பெங்களூர்-ஊப்ளி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களில் இந்த வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
சிமோகா இன்டர்சிட்டி உள்பட மேலும் 4 ரெயில்களில் இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். படிப்படியாக இந்த வசதி மாநிலத்தில் ஓடும் அனைத்து முக்கிய ரெயில்களிலும் ஏற்படுத்தப்படும். ரெயிலில் டி.வி. வசதியை ஏற்படுத்தி உள்ள தனியார் நிறுவனத்துக்கு அரசு கட்டணம் எதுவும் செலுத்துவது இல்லை. மாறாக, அந்த நிறுவனம் ரூ.52 லட்சத்து 92 ஆயிரத்தை ரெயில்வேக்கு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரெயில்வேக்கும் வருமானம் கிடைக்கிறது. மேலும் பொதுமக்களும் பயன் அடைகிறார்கள்.
 
இவ்வாறு மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

குலாம்நபி ஆசாத் சென்னை வந்தார்: கருணாநிதியுடன் நாளை சந்திப்பு

ஆலந்தூர், பிப்.12–காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். நாளை காலை 11.30 ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif