அபு சலீம், நாடு கடத்தல் உத்தரவு ரத்து உறுதி: இந்தியாவின் அப்பீலை போர்ச்சுக்கல் நிராகரித்தது || abu salim deportation order cancel confirm india portugal reject
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
அபு சலீம், நாடு கடத்தல் உத்தரவு ரத்து உறுதி: இந்தியாவின் அப்பீலை போர்ச்சுக்கல் நிராகரித்தது
அபு சலீம், நாடு கடத்தல் உத்தரவு ரத்து உறுதி: இந்தியாவின் அப்பீலை போர்ச்சுக்கல் நிராகரித்தது
புதுடெல்லி, ஜூலை.10–
 
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் அபு சலீம். போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து 2005ம் ஆண்டு அவர் நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டார். அப்போது, அபு சலீம் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்பட மாட்டாது என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
 
ஆனால் அந்த வாக்குறுதியை மீறி, அவர் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெறுவதாக கண்டு, அவரது நாடு கடத்தல் உத்தரவை போர்ச்சுக்கல் ஐகோர்ட் ரத்து செய்தது.
 
இதை எதிர்த்து போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தும், இந்தியாவின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கியது.
 
இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை பற்றி பரிசீலிக்கப்படுவதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மராட்டிய மந்திரிசபையில் எத்தனை இடம்?: பா.ஜனதாவுக்கு சிவசேனா கெடு

மும்பை, நவ. 1–மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாததால் கூட்டணி கட்சியான சிவசேனா ....»