மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சூரிய ஒளி மின்சாரம்: பொற்றாமரை குளத்தின் தூண்களில் நவீன மின் விளக்குகள் || meenakshi amman temple solar electric
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சூரிய ஒளி மின்சாரம்: பொற்றாமரை குளத்தின் தூண்களில் நவீன மின் விளக்குகள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சூரிய ஒளி மின்சாரம்: பொற்றாமரை குளத்தின் தூண்களில் நவீன மின் விளக்குகள்
மதுரை, ஜூலை 10-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். மேலும் உலக புகழ்பெற்று விளங்குவதால் தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பையும், கோவில் அமைப்பையும் கண்டு வியந்து செல்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து பக்தர்களின் வசதிக்கேற்ப சில மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் பொற்றாமரை குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். சமீப காலமாக தண்ணீர் வற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் தற்போது சில தொழில்நுட்பத்தோடு பெற்றாமரை குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் (சோலார்) பெற திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக மத்திய சுற்றுலாத்துறை ஆலோசகர் ஸ்ரீகாந்த் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் இதற்கான பணிகள் மேற்கொள்வது குறித்து கோவில் இணை ஆணையர் ஜெயராமனிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கோவில் கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், பொற்றாமரை குளத்தை சுற்றிய மண்டபங்களின் தூண்களில் நவீன வண்ண விளக்குகள் பொருத்தவும், புதுமண்டபத்தில் ஒளி, ஒலி காட்சியை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் எல்லீஸ் நகரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உணவு விடுதி, வாகன ஓட்டுனர்களுக்கான தங்கும் விடுதி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் தர்மராஜ், மீனாட்சி அம்மன் கோவில் பொறியாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் மாதந்தோறும் மின் கட்டணமாக கட்டப்படும் ரூ.5 லட்சம் மிச்சமாகும் என்று கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு: மதுரை கிரானைட் முறைகேடு பற்றி சகாயம் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

ம் தேதி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் ....»