டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: கரூரில் பா.ம.க. ஆலோசனை || tasmac shop closed protest karur pmk meeting
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: கரூரில் பா.ம.க. ஆலோசனை
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: கரூரில் பா.ம.க. ஆலோசனை
கரூர், ஜூலை 10-
 
கடவூர் ஒன்றிய பா.ம.க செயற்குழு கூட்டம், தரகம்பட்டியில் உள்ள பா.ம.க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடவூர் ஒன்றிய பா.ம.க செயலாளர், கீரனூர் பழனிச்சாமி, தலைமை தாங்கினார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். கடவூர் ஒன்றிய அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வரவேற்று பேசினார்.
 
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 
நாளை (புதன் கிழமை) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவதென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் படி, கடவூர் ஒன்றியத்தில் உள்ள தரகம் பட்டி டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் ஒன்றிய செயலாளர் கீரனூர் பழனிச்சாமி தலைமையில் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மற்றொரு தீர்மானத்தில் கடவூர் ஒன்றிய பா.ம.க மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில்சுப்ரமணி, சீரங்கன், ரமேஷ், பழனிச்சாமி, மகேந்திரன், அழகர்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கரூர்