களக்காடு பகுதியில் கந்துவட்டி கேட்டு மிரட்டல்: பெண் உள்பட 2 பேர் கைது || women ask usury near kalakkadu area two person arrested
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலிலும் விடுமுறை
  • கனமழை நீடிப்பதால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
  • வெள்ளக்காடான சாலைகள்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்
  • மழையால் தண்டவாளம் மூழ்கியது: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 ரெயில்கள் ரத்து
  • தண்டவாளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் புதுச்சேரி-திருப்பதி விரைவு ரெயில் ரத்து
  • சென்னை அருகே ஊரப்பாக்கம், தாம்பரத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணி
  • நாகை, திருவண்ணாமலையில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வெள்ள பாதிப்பு குறித்து ஜெயலலிதாவிடம் கேட்டறிந்த மோடி: முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
களக்காடு பகுதியில் கந்துவட்டி கேட்டு மிரட்டல்: பெண் உள்பட 2 பேர் கைது
களக்காடு பகுதியில் கந்துவட்டி கேட்டு மிரட்டல்: பெண் உள்பட 2 பேர் கைது
களக்காடு, ஜூலை. 10-
 
களக்காடு திருக்கல்யாண தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது63). மின்வாரிய ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2007-ம் ஆண்டு களக்காட்டை சேர்ந்த அய்யனார் (40) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். மாதம் 600 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளாக பெருமாள் பணம் கட்டிவந்துள்ளார்.
 
இந்த நிலையில் முதல் தொகை ரூ.20 ஆயிரம், வட்டி ரூ.30 ஆயிரம் பாக்கி உள்ளது என்றும் அதனை தருமாறு பெருமாளை அய்யனார் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக களக்காடு போலீசில் பெருமாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.
 
களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் ஜீவா (33). இவர் களக்காடு கோவில்பத்து பகுதியை சேர்ந்த யாக்கோபு என்பவரின் மனைவி லட்சுமி (55) என்பவரிடம் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அன்று முதல் மாதம் தோறும் வட்டி மற்றும் அசல் பணத்தை ஜீவா கட்டி வந்துள்ளார்.
 
500 ரூபாய் மட்டும் கட்ட வேண்டிய நிலையில், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என லட்சுமி மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லட்சுமியை களக்காடு போலீசார் கைது செய்தனர். அவரது கணவர் யாக்கோபுவை தேடி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது

நெல்லை, டிச. 1–வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif