லாரி மோதி ஏட்டு பலி: 3 பேர் கோர்ட்டில் சரண் || head constable dead 3 person surrender in court
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
லாரி மோதி ஏட்டு பலி: 3 பேர் கோர்ட்டில் சரண்
லாரி மோதி ஏட்டு பலி: 3 பேர் கோர்ட்டில் சரண்
நாகப்பட்டினம், ஜூலை.10-
 
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கூத்தியம் பேட்டையில் மது விலக்கு சோதனையில் ஈடுபட்டு இருந்த மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன் கார் மோதி பலியானார்.
 
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வாகன விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி உடையார் பாளையம் வெண்ணங்குழி பகுதியை சேர்ந்த செல்வக் குமார், இன்னூர் கிராமத்தை சேர்ந்த செல்வம், உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் ஆகியோர் கும்பகோணம் 1 -வது குற்றவியல் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.
 
அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கார் மோதி பலியான ஏட்டு ரவிச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவிச்சந்திரன் உடலுக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், டி.எஸ்.பி. மணிவண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
 
பின்னர் நாகை மாவட்ட ஆயுதப்படை போலீசார் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி இறுதி மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - நாகப்பட்டினம்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»

MudaliyarMatrimony_300x100px.gif