அகில இந்திய கைப்பந்து: இந்திய ஜூனியர் அணி வெற்றி || all india vollyball india junior team win
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
அகில இந்திய கைப்பந்து: இந்திய ஜூனியர் அணி வெற்றி
அகில இந்திய கைப்பந்து: இந்திய ஜூனியர் அணி வெற்றி
சென்னை, ஜூலை. 10-

நெல்லை பிரண்ட்ஸ் கிளப்-டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் இந்திய உருக்காலை ஆணையம் (கெய்ல்) மற்றும் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்பு குழு தலைவருமான தேவாரம் தலைமை தாங்கினார். கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சி.சக்திகுமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குனர் எஸ்.சி.சேகர், புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி, சுங்க இலாகா துணை கமிஷனர் எம்.தமிழ்வேந்தன், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், நெல்லை பிரண்ட்ஸ் கிளப் துணைத்தலைவர்கள் ஜெகதீசன், சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதன் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி 25-21, 25-23, 25-20 என்ற நேர்செட் கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

மற்ற ஆட்டங்களில் ஐ.ஓ.பி 3-1 என்ற கணக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தையும், கேரளா போலீஸ் 3-2 என்ற கணக்கில் பனிமலரையும், சுங்க இலாகா 3-1 என்ற கணக்கில் இந்திய இளைஞர் அணியையும் தோற்கடித்தனர்.

பெண்கள் பிரிவில் மத்திய ரெயில்வே 3-1 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் அணியை வென்றது. ஆண்கள் பிரிவில் இன்று மாலை நடைபெறும் ஆட்டங்களில் இந்திய ஜூனியர்-பனிமலர் (5 மணி), இந்திய இளைஞர் அணி தெற்கு ரெயில்வே (6 மணி), சுங்க இலாகா-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (6.30), வருமானவரி-தமிழ்நாடு போலீஸ் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே டாக்டர் சிவந்தி கிளப், இந்திய ஜூனியர்-கேரள மின்சார வாரியம் மோதுகின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் சைன்சிங்குக்கு 4-வது தங்கம்

வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif