'மங்காத்தா' பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம் || mankatha actor mahath attack actor mohanbabu son manoj arrest
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
'மங்காத்தா' பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
'மங்காத்தா' பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்
சென்னை, ஜூலை. 10-

நடிகர் அஜீத்குமார் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் நடித்தவர் இளம் நடிகர் மகத். பெசன்ட்நகர் கலாசேத்ரா காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 7-ந்தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ‘பிலிம்பேர்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர் மஹத், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும், நடிகருமான மனோஜ் மற்றும் ஏராளமான நடிகர் - நடிகைகள் பங்கேற்றனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் மனோஜ் நடிகர் மகத்தை தனியாக அழைத்துச் சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் 3 பேரும் போதையில் இருந்தனர். 4 பேரும் சேர்ந்து திடீரென மகத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் மது விருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் மனோஜை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மகத், ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதில் நடிகர் மோகன்பாபு ஆந்திராவில் மிகப்பெரிய நடிகர். அவரது மகன் மனோஜால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை தாக்கிய அவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

துணை கமிஷனர் புகழேந்தி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

341 ஐபிசி (தடுத்து நிறுத்துதல்), 294-பி-ஐ.பி.சி (அசிங்கமாக பேசுதல்), 323 ஐ.பி.சி. (கையால் தாக்குதல்), 506(1) (ஆயுதங்கள் இன்றி கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மனோஜை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையம் அருகில் அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று தேடினர். அதற்குள் மனோஜ் அங்கிருந்து நண்பர்களுடன் ஆந்திராவுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் இன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த நடிகை டாப்ஸியை மகத்தும், மனோஜும் காதலிப்பதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட போட்டியே மோதலில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, மோதலுக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif