பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தது முஷாரப்புக்கு தெரியும்: உளவுத்துறை முன்னாள் தலைவர் தகவல் || Bin Laden Pakistan musharaf intelligence Former president
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தது முஷாரப்புக்கு தெரியும்: உளவுத்துறை முன்னாள் தலைவர் தகவல்
பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தது முஷாரப்புக்கு தெரியும்: உளவுத்துறை முன்னாள் தலைவர் தகவல்
இஸ்லாமாபாத், ஜூலை. 10-

உலக நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என அந்த நாட்டு அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையே அங்கு பின்லேடன் பதுங்கி இருந்தது முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தெரியும். அவரது ஒப்புதலின் பேரில்தான் அவர் அங்கு தங்க வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

இந்த நிலையில் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தது முஷரப்புக்கு தெரியும் என ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜெனரல் ஜியாவுதீன்பட் தெரிவித்துள்ளார். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியின்போது இதை அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

முஷ்ரப் அதிபராக இருந்தபோது அவருக்கு ராணுவ அதிகாரி பிரிகேடியர் இஜாஷ் ஷா நெருக்கமானவராகவும், நம்பகத்தன்மை உடையவராகவும் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். எனவே அவரது பாதுகாப்பில் அபோதாபாத்தில் பின்லேடன் இருந்திருக்க வேண்டும். இதை என்னால் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமைதி நடவடிக்கையை வைத்தே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: சிரியா போராளிக்குழு தலைவர் அறிவிப்பு

உள்நாட்டுப் போரால் கடந்த ஐந்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif