இளைஞர் அணி செயலாளர் விபத்தில் மரணம்: பா.ம.க. போராட்டம் 17 ந்தேதிக்கு மாற்றம் ஜி.கே.மணி அறிவிப்பு || g k mani announced demonstration changed on 17th
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
இளைஞர் அணி செயலாளர் விபத்தில் மரணம்: பா.ம.க. போராட்டம் 17-ந்தேதிக்கு மாற்றம்- ஜி.கே.மணி அறிவிப்பு
இளைஞர் அணி செயலாளர் விபத்தில் மரணம்: பா.ம.க. போராட்டம் 17-ந்தேதிக்கு மாற்றம்- ஜி.கே.மணி அறிவிப்பு
சென்னை, ஜூலை. 10-
 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பா.ம.க.வின் இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் இன்று அதிகாலை திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அளவில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் வரும் 16-ந்தேதி திங்கட்கிழமை வரை ஒரு வாரத்திற்கு துக்கம் கடை பிடிக்கப்படும்.
 
இந்த காலத்தில் பா.ம.க. கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்சி நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்படுகின்றன. நாளை தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் அறவழிப் போராட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது.
 
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 6172 மதுக்கடைகளுக்கு முன்பாக வரும் 17-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு சென்னையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு தலைமையிலும், காஞ்சீபுரத்தில் இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையிலும், ஈரோட்டில் கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமையிலும், விருதுநகரில் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையிலும் நடைபெறும்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பலத்த மழை நீட்டிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் நிரம்பிய அணைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif