சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு || asset accumulation case jaganmohan reddy petition in supreme court
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • வெள்ள பாதிப்பு குறித்து ஜெயலலிதாவிடம் கேட்டறிந்த மோடி: முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
  • பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு: 18,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக உயர்வு
  • தமிழகக்தில் டிச.7ல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு
  • விழுப்புரம், கடலூர், நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு
சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடெல்லி, ஜூலை.10-
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன்ரெட்டி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் மீது 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 
 
இந்நிலையில் கடந்த மே மாதம் 27-ந்தேதி ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரால் ஆந்திராவில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் அவரது கட்சி 15 சட்டசபை தொகுதிகள், ஒரு எம்.பி. தொகுதியில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் ஜெகன் மோகன்ரெட்டி ஜாமீன் கேட்டு ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கு சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அவரது ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
 
இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
என்மீது பழிவாங்கும் போக்கில் சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. என் தந்தையின் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர்கள்தான் என் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சி.பி.ஐ. கூறி வருகிறது. இதுவரை அதற்கான ஆதாரத்தை அவர்கள் காட்டவில்லை.
 
என் மீது வழக்குப் பதிவு செய்து 9 மாதங்களுக்கு பிறகு கைது செய்ய வேண்டியதன் அவசியம்தான் என்ன? அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.
 
இதுவரை என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ. எந்த ஆதாரத்தையும் காட்டாத நிலையில் எனக்கு ஐகோர்ட்டு ஜாமீன் மறுத்து விட்டது. நான் ஒரு கட்சித் தலைவர் என்பதால் எனக்கு நிறைய பணிகள் உள்ளன. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கில் சட்டசபையில் நடந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் அடங்கிய பதிவுகளை ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif