நேட்டோவுக்கு வழி திறப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பேரணி || open route for nato terrorist procession in pakistan
Logo
சென்னை 28-11-2014 (வெள்ளிக்கிழமை)
நேட்டோவுக்கு வழி திறப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பேரணி
நேட்டோவுக்கு வழி திறப்பு: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பேரணி
இஸ்லாமாபாத், ஜூலை.10-
 
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்களின் ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது.
 
கடந்த டிசம்பர் மாதம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தவறுதலாக பாகிஸ்தான் ராணுவ முகாமில் இருந்த 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையினருக்கு வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்லும் ரோட்டை பாகிஸ்தான் அடைத்தது.
 
இதனால் அமெரிக்கா-பாகிஸ்தானுக்கு இடையேயான உறவில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க வருத்தம் தெரிவித்தது.எனவே நேட்டோ படைக்கு பொருட்கள் எடுத்து செல்லும் ரோட்டை மீண்டும் திறந்து விட பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.
 
இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் நேற்று எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள். இதற்கு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ்சயீத் தலைமை தாங்கினான். இவன் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.
 
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.   பாராளுமன்றம் அருகே முடிவடைந்த பேரணியில் சயீத் பேசினான். அப்போது, பாகிஸ்தான் அமெரிக்காவின் அடிமையாக உள்ளது என்றான்.
 
பேரணியில் கலந்து கொண்ட தீவிரவாதிகள் சிலர் ராணுவ வீரர்களின் சீருடை போன்று அணிந்து இருந்தனர். மேலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பகிரங்கமாக எடுத்து வந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

தெற்கு ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது: விமானங்கள் ரத்து

தெற்கு ஜப்பானில் 22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக எரிமலை வெடித்ததால் அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் ....»