வேட்புமனு விவகாரம்: பிரணாப்முகர்ஜி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பி.ஏ.சங்மா முடிவு || complaint on pranab mukherjee on supreme court b a sangma decision
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
வேட்புமனு விவகாரம்: பிரணாப்முகர்ஜி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- பி.ஏ.சங்மா முடிவு
வேட்புமனு விவகாரம்: பிரணாப்முகர்ஜி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- பி.ஏ.சங்மா முடிவு
புதுடெல்லி, ஜூலை.10-
 
பிரணாப் முகர்ஜி வேட்பு மனு பிரச்சினையில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல பி.ஏ.சங்மா முடிவு செய்துள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி வி.கே.அக்னி கோத்ரி பரிசீலித்த போது, பிரணாப் முகர்ஜியின் மனு மீது பி.ஏ.சங்மா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
ஆதாயம் தரும் பதவியின் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக பிரணாப் முகர்ஜியால் அளிக்கப்பட்ட கடிதத்தில் உள்ள அவரது கையெழுத்தும், வேட்புமனுவில் உள்ள அவரது கையெழுத்தும் வித்தியாசமாக உள்ளது.
 
எனவே, ராஜினாமா கடிதத்தில் உள்ள கையெழுத்து போலியானது. எனவே, பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இதை தேர்தல் அதிகாரி அக்னிகோத்ரி ஏற்கவில்லை.  
 
இதையடுத்து பி.ஏ.சங்மா சார்பில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் சத்யபால் ஜெயின், பிஜு ஜனதாதளம் எம்.பி. பரத்ருஹரி மஹதாப், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோர் தேர்தல் ஆணையர்களை சந்தித்து, பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய தேர்தல் அலுவலர் அக்னி கோத்ரிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி 180 பக்க மனுவை அளித்தனர்.
 
வேட்புமனுவில் உள்ள பிரணாப் முகர்ஜியின் கையெழுத்தும், அவரது ராஜினாமா கடிதத்தில் உள்ள கையெழுத்தும் வெவ்வேறானவை என்று தடயவியல் நிபுணர் அளித்துள்ள அறிக்கையையும், மனுவுடன் இணைத்துள்ளனர்.
 
இந்த சந்திப்புக்கு பிறகு சுப்பிரமணியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்திய புள்ளியியல் நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து பிரணாப் முகர்ஜி கொடுத்த கடிதம் உண்மையானதுதானா? என்ற சந்தேகம் உள்ளது.
 
பிரணாப் முகர்ஜி இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பொறுப்பில் இருப்பது பற்றி நாங்கள் பிரச்சினை எழுப்பிய பிறகுதான், அவரது ராஜினாமா கடிதம் ஜூன் 20-ந்தேதி அனுப்பப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.   இதை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் அதிகாரி பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
பிரணாப் முகர்ஜி வேட்பு மனுதாக்கல் செய்தபோது, ரவீந்திரபாரதி சங்கத்தின் தலைவர் பதவி, பிர்பும் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். எனவே, தார்மீக அடிப் படையில் தனது வேட்பு மனுவை பிரணாப் முகர்ஜி வாபஸ்பெற வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.   சத்யபால் ஜெயின் கூறியதாவது:-
 
இந்த பிரச்சினையில் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். தேர்தல் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பி.ஏ.சங்மா சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.
 
இந்திய புள்ளியியல் நிறுவன தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து பிரணாப் முகர்ஜி அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டவர், அதிகாரம் பெற்ற அதிகாரிதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனை கௌரவிக்கும் கூகுள்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வர்கீஸ் குரியன் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என ....»