முதல் மந்திரி பதவியை சதானந்தகவுடா இன்று ராஜினாமா செய்கிறார் || minister sathanantha today resign
Logo
சென்னை 01-03-2015 (ஞாயிற்றுக்கிழமை)
முதல்-மந்திரி பதவியை சதானந்தகவுடா இன்று ராஜினாமா செய்கிறார்
முதல்-மந்திரி பதவியை சதானந்தகவுடா இன்று ராஜினாமா செய்கிறார்
பெங்களூர், ஜூலை.10-
 
சதானந்தகவுடாவை மாற்றிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. சதானந்தகவுடா ஏற்கனவே தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரியிடம் வழங்கிவிட்டார்.
 
இந்த நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. இன்று (செவ்வாய்கிழமை) சதானந்தகவுடா கவர்னர் பரத்வாஜை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
 
அதை தொடர்ந்து சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தான் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதற்கான கடிதத்தை ஜெகதீஷ் ஷெட்டர் கவர்னரிடம் வழங்குகிறார். அதை தொடர்ந்து ஆட்சி அமைக்க வரும்மாறு கவர்னர் அழைப்பு விடுப்பார்.
 
நேற்று காலை முதல்-மந்திரி சதானந்தகவுடாவை கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பா, ஆதரவு மந்திரிகள் சுரேஷ்குமார், ராமதாஸ், பச்சேகவுடா, பாலச்சந்திர ஜார்கிஹோளி ஆகியோர் சந்தித்து பேசினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் பணி: தலைமை செயலகத்தில் இன்று மின்தடை

தமிழக அரசின் தலைமை செயலகம் சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டசபை கூட்ட ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif