ரங்கசாமி காங்கிரசோடு நட்புடன் இருக்கிறார்: கண்ணன் எம்.பி. பேட்டி || Rangasamy congress good relation kannan MP interview
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
ரங்கசாமி காங்கிரசோடு நட்புடன் இருக்கிறார்: கண்ணன் எம்.பி. பேட்டி
ரங்கசாமி காங்கிரசோடு நட்புடன் இருக்கிறார்: கண்ணன் எம்.பி. பேட்டி
புதுச்சேரி, ஜூலை.9-

கண்ணன் எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கும், எதிர்க்கும் பல்வேறு கட்சிகள் இந்தியா முழுவதும் பிராணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது.

உள்நாட்டு அரசியலை மறந்து கட்சிகள் ஆதரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரசை எதிர்க்கும் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சியும், பார்வார்டு பிளாக் கட்சியும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் நன்றாகவே இருக்கும். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால் இன்னும் பல அரசியல் கட்சிகள் அவரை ஆதரிக்க தயாராக இருக்கின்றன.

புதுவையில் எல்லோரும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். ஒரு சில நண்பர்கள் கட்சி கட்டளைப்படி செயல்படலாம். அவர்களுக்கும் கட்சியின் கட்டளை பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும்படி வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், ரங்கசாமியும் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததர்காக எனது நன்றியை தெரிவித்தேன். அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் நண்பர்கள்தான். பழக்க வழக்கங்கள், செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். அதனை பேசி தீர்த்து கொள்ள முடியும்.

அகில இந்திய ஒருமைப்பாட்டு கழக கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு நல்ல கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு நல்ல மாற்றத்தையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. சண்டை-சச்சரவு இல்லாமல் புதுவையின் வளர்ச்சிக்கு ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று அவர் கூறியுள்ளார். இப்படித்தான் ஒரு முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும்.

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கருத்தை நான் வரவேற்கிறேன். மத்திய அரசு புதுவைக்கு தேவையான நிதியை அளித்துள்ளது. முதல்-அமைச்சர் விரைவில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவு தருகிறது. சோனியா காந்தியும், மத்திய அமைச்சர்களும் ஆதரவாகவே உள்ளனர்.

புதுவை மக்கள் மீது காங்கிரஸ் என்றும் அக்கறையோடு இருக்கும் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தற்போது அது நிருபிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு எவ்வித பாகுபாடும் பார்க்கவில்லை. நானும், மத்திய மந்திரி நாராயணசாமியும்கூட புதுவை அரசுக்கு தேவையானவற்றை செய்துதர தயாராக இருக்கிறோம்.

முதல்-அமைச்சர் நிதியை பற்றி கவலைபடவேண்டாம். இன்னும் வேண்டிய நிதி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. புதுவை வந்த பிரதமர் மாநில வளர்ச்சிக்கு உறுதுடிணயாக இருப்பேன் என்றும் சுற்றுலாவை மேம்படுத்தவும் கேட்டுள்ளார். உயர்கல்வி கேந்திரமாக புதுவையை மாற்ற உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார். இதனால் நட்போடும், தோழமையோடும், சகோதர முறையிலும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து வாட் வரியை பட்ஜெட்டில் ரத்து செய்துவிடுங்கள். இதனை வியாபாரிகளுக்காக மட்டும் சொல்லவில்லை. புதுவை மக்களுக்காக சொல்கிறேன். புதுவைக்கு கடலூரில் இருந்து வந்த காலம் மாறி நாம் விழுப்புரம், திண்டிவனத்துக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது புதுவைக்கு நல்ல அறிகுறி அல்ல.

புதுவை மேலும் வளர வாட் வரியை ரத்து செய்ய வேண்டும். பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என நம்புகிறேன். நமது மாநிலத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் வரவேண்டும். சுற்றுலா மூலமாகவே அதிகளவில் நாம் வளரமுடியும். எனவே மீண்டும், மீண்டும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சண்டை-சச்சரவு மூலமாகவே எதையும் பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. முதல்-அமைச்சர் ரங்கசாமி நம்மோடு நட்புடனே இருக்கிறார். சோனியா காந்தியை அவர் சந்திப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கி தரப்படுகிறது. மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத்தும், ரங்கசாமியை கட்டிபிடித்து பாசம் காட்டுகிறார்.

ரங்கசாமியும் தனது மதிப்புமிகு, மரியாதைக்குரிய தலைவர் சோனியா காந்திதான் என்று கூறுகிறார். இதனால் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாம் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் நமது விருப்பத்தை நிறைவேற்றக்கூடாது. அப்படி செய்தால் அது மக்களிடையே குழப்பத்தை ஏறப்படுத்தும். அதற்காக காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டாம் என்று நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சிறிய சறுக்கல் இருக்கிறது. இதனை சீர்செய்து சக்திமிக்க, வலுமிக்க, செல்வாக்கு மிக்க இயக்கமாக காங்கிரசை மாற்ற வேண்டும். நட்போடு செயல்பட்டு காங்கிரசை வலுப்படுத்துங்கள். இதற்காகத்தான் முன்னாள் அமைச்சர் வல்சராஜ், லட்சுமி நாராயணன் ஆகியோரை ஜனாதிபதி தேர்தல் ஏஜெண்டாகவும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர்களாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பை நான் தொடங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif