வேலம்மாள் பள்ளியில் உலக செஸ் சாம்பியன் ஆனந்துக்கு பாராட்டு விழா || velammal school world chess champion anand tribute
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
  • பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் ஆளில்லா விமானம் மூலம் சகாயம் குழுவினர் ஆய்வு
  • ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்கிறார் முப்தி: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • எல்லையில் அத்துமீறினால் இந்தி்யாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: பாக் ராணுவ தளபதி எச்சரிக்கை
  • உலக கோப்பை 2015: தென்ஆப்பிரிக்கா 150/3 (30.3)
வேலம்மாள் பள்ளியில் உலக செஸ் சாம்பியன் ஆனந்துக்கு பாராட்டு விழா
வேலம்மாள் பள்ளியில் உலக செஸ் சாம்பியன் ஆனந்துக்கு பாராட்டு விழா
சென்னை, ஜூலை.9-

ரஷியாவில் சமீபத்தில் நடந்த உலக செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்டை தோற்கடித்தார்.

ஆனந்த் 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று முத்திரை பதித்தார். 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி சார்பில் இன்று பாராட்டு விழா நடந்தது.

ஆனந்தை பாராட்டி பள்ளி மாணவிகள் வெள்ளி வாள் வழங்கி, மலர் கிரீடம் அணிவித்தனர். பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், ஆனந்தை பாராட்டும் விதமாக ரூ.5 லட்சம் வழங்கினார். ஆனந்த் அந்த தொகையை பள்ளியில் படிக்கும் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகையாக வழங்குமாறு திருப்பி கொடுத்தார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைகளை புரிந்த வேலம்மாள் பள்ளியை சேர்ந்த 78 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை ஆனந்த் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆனந்த் பேசியதாவது:-

எந்த ஒரு விளையாட்டிலும் வெற்றியை நினைக்ககூடாது. கடினமான பயிற்சி பெறவேண்டும். இப்படி செய்தாலே வெற்றி தானாகவே வந்து சேரும். வேலம்மாள் பள்ளி நிர்வாகம், மாணவ-மாணவிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து வருவது பாராட்டத்தக்கது என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

உலக கோப்பை கிரிக்கெட்டில் குவியும் சதங்கள்

பிளே இல்லாத நேரத்தில் உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்படும் பீல்டர் எண்ணிக்கை 5-ல் இருந்து 4-ஆக குறைப்பு) ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif