கானாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு விசாரணை கைதி தீக்குளித்து தற்கொலை || kanathur police station before enquiry prisoner self immolation
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
கானாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு விசாரணை கைதி தீக்குளித்து தற்கொலை
கானாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு விசாரணை கைதி தீக்குளித்து தற்கொலை
திருவான்மியூர்,ஜூலை. 9-

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அடுத்துள்ள பனையூர் ஜெய் நகரைச் சேர்ந்தவர் ஹிமாயுன் (46). திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவரை நேற்று போலீசார் கானாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் வைத்து ஹிமாயுனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஹிமாயுன், போலீஸ் நிலையத்தில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றியபடி வெளியே வந்து போலீஸ் நிலைய வாசல் முன்பு தீக்குளித்தார். உடலில் தீப்பிடித்த நிலையில் அய்யோ, அம்மா என்று அலறியபடியே ஹிமாயுன் அங்கும் இங்கும் ஓடினார். பின்னர் உடல் கருகிய நிலையில் அவர் கீழே விழுந்தார்.

இதனை பார்த்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்கள் பதட்டத்துடன் வெளியில் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 7.30 மணிஅளவில் ஹிமாயுன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன ஹிமாயுன் பனையூர் ஜெ நகரில் உள்ள ஜாகிர்உசேன் தெருவில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். கைப்பை தைக்கும் தொழில் செய்து வந்தார். மேலும் வீடுகளில் கொசு வலை அடிக்கவும் செய்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பனையூரைச் சேர்ந்த கீதா என்ற பெண் தனது வீட்டுக்கு கொசு வலை அடிக்க ஹிமாயுனை அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவரது வீட்டில் தங்க கம்மல் திருட்டு போய் இருந்தது.

ஹிமாயுன்தான் அதனை திருடியிருப்பார் என சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹிமாயுனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தான் திருடவில்லை என்று ஹிமாயுன் மறுத்தார். ஆனாலும் போலீசார் அவரை விடவில்லை. இந்த நிலையில்தான் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹிமாயுன் போலீஸ் நிலையத்தில் இருந்த மண் எண்ணையை எடுத்தே உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். வேறு ஒரு வழக்கு தொடர்பாக இந்த மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர்களின் கவனக்குறைவே இச்சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹிமாயுனுக்கு யாஷ்மின் என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த சுமார் 500.க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஹிமாயுன் சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அதற்கு சரியான பதில் கிடைக்கும் வரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், துணை கமிஷனர் சுதாகர், நீலாங்கரை உதவி கமிஷனர் உமாசங்கர் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த இடத்தை உரிமை கொண்டாட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை உரிமை கொண்டாட முடியாது என்று ....»