ஓரின சேர்க்கையாளரை மணந்த அமெரிக்க எம்.பி. || American MP gay marriage
Logo
சென்னை 01-02-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் பலி
  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: சென்னையில் திமுக சட்டத்துறை நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம்
  • நெல்லை: சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட 4.5 கிலோ போதை பொருள் பறிமுதல்
  • முத்தரப்பு கிரிக்கெட் :ஆஸ்திரேலியா 26 ஓவரில் 106/4
ஓரின சேர்க்கையாளரை மணந்த அமெரிக்க எம்.பி.
ஓரின சேர்க்கையாளரை மணந்த அமெரிக்க எம்.பி.
நியூயார்க், ஜூ¬.9-

அமெரிக்காவில் உள்ள மசாசுசெட் பகுதியை சேர்ந்தவர் பர்னே பிராங்வெட் (72). தற்போது இவர் ஆளும் ஜனநாயக கட்சியின் எம்.பி. ஆக உள்ளார். இவர் ஓரின சேர்க்கையாளர் ஆவார். இதை கடந்த 1980-ம் ஆண்டிலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

இவருககு ஓகுன்குயிட் என்ற இடத்தை சேர்ந்த மற்றொரு ஓரின சேர்க்கையாளர் ஜிம்ரெடி (42) என்பவருடன் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது. இவர் மரவேலை, பெயிண்டிங், வெல்டிங் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டனர். இந்த நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவலை மசாசுசெட் மாகாண கவர்னர் டேவல்பாட்ரிக் தெரிவித்தார். மேலும் அவர்களது திருமணத்தில் இவர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

தற்போது அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் இல்லை. ஆனால் அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என ஓரின சேர்க்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அதிபர் ஒபாமா விரைவில் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இது வர இருக்கின்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க எம்.பி. பர்னே பிராங்வெட் ஓரின சேர்க்கை திருமணம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓரின சேர்க்கையாளரை திருமணம் செய்த அமெரிக்க முதல் எம்.பி. என்ற பெருமையையும் பர்னே பெற்றுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் வீடு, இருளில் மூழ்கடிப்பு

வங்காள தேசத்தில் 1991-96, 2001-06 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் கலீதா ஜியா. தற்போது எதிர்க்கட்சித்தலைவராக ....»