இந்திய வரலாற்றில் நரேந்திர மோடியைப்போல் எந்த அரசியல் தலைவரும் இழிவுபடுத்தப்பட்டது இல்லை அத்வானி || no one discredited like narendra modi say advani
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
இந்திய வரலாற்றில் நரேந்திர மோடியைப்போல் எந்த அரசியல் தலைவரும் இழிவுபடுத்தப்பட்டது இல்லை-அத்வானி
இந்திய வரலாற்றில் நரேந்திர மோடியைப்போல் எந்த அரசியல் தலைவரும் இழிவுபடுத்தப்பட்டது இல்லை-அத்வானி
புதுடெல்லி, ஜூலை.9-
 
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தனது வலைத்தளத்தில்(பிளாக்) எழுதி இருப்பதாவது:-
 
இந்திய வரலாற்றில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியைப் போல் எந்தவொரு அரசியல் தலைவரும் திட்டமிட்டு மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டது இல்லை என்று நான் கருதுகிறேன்.
 
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதியுள்ள திருப்புமுனைகள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற விஷயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
குஜராத் கலவரங்கள் நடைபெற்ற காலக்கட்டத்தில், அப்துல்கலாம் அங்கு செல்ல விரும்பியதாகவும், இது குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாயியிடம் அவர் விவாதித்தபோது, அவர் சாதாரணமாக, நீங்கள் இப்போது அங்கு செல்வது தேவைதானா? என கேட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
 
அதாவது, குஜராத்துக்கு அப்துல் கலாமை செல்லவிடாமல் வாஜ்பாய் தடுத்து நிறுத்த முயற்சித்து இருக்கிறார் என்பதுபோல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
 
நரேந்திர மோடி அரசை காப்பாற்றுவதற்காக இந்த முயற்சியை வாஜ்பாய் எடுத்து இருக்கிறார் என்ற ரீதியில் தவறு கண்டுபிடித்து வெளியிடப்பட்ட செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின.அதே நேரத்தில் நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் தனது புத்தகத்தில் வழங்கியுள்ள பாராட்டுகள் பற்றி ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை.
 
தனது குஜராத் பயணம் புறக்கணிக்கப்பட்டு விடும் என கேள்விப்பட்டு அஞ்சியதாகவும் அப்துல் கலாம் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கலாமுக்கு நேர்ந்த அனுபவம் முற்றிலும் மாறானது. டாக்டர் கலாமுடன் மோடியும், குஜராத் அரசும் மிகுந்த ஊக்கத்துடன் ஒத்துழைத்தனர். இந்த பாராட்டுகள் வெளியிட தகுதியானவை என இன்னும் எந்த ஊடகமும் கருதவில்லை. இவ்வாறு அத்வானி தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு உட்பட்டே புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக மந்திரி பேட்டி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ....»