இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது ராஜபக்சே || Foreign policy challenges remain for Sri Lanka Rajapaksa
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
  • செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியாக அதிகரிப்பு
  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலிலும் விடுமுறை
  • மதுராந்தகம் ஏரியில் 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு-கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
  • கனமழை நீடிப்பதால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
  • வெள்ளக்காடான சாலைகள்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்
  • மழையால் தண்டவாளம் மூழ்கியது: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 ரெயில்கள் ரத்து
  • தண்டவாளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் புதுச்சேரி-திருப்பதி விரைவு ரெயில் ரத்து
இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது- ராஜபக்சே
இலங்கைக்கு எதிரான கடுமையான வெளியுறவு கொள்கை தொடருகிறது- ராஜபக்சே
கொழும்பு,ஜூலை.8-
 
இலங்கைக்கு எதிராக,மேற்கத்திய நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் ஆதரவு போராட்டங்களினால், தொடரும் கடுமையான வெளியுறவு கொள்கை சவால்களை முறியடிக்க வேண்டும் என இலங்கை பிரதிநிதிகளை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டுள்ளார்.அவைகள் மேலும் தொடராமல் தடுத்து முறியடிக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க அவர்களை வேண்டியுள்ளார்.
 
தியாடலவா என்னும் மலைவசச்தலத்தில் இரண்டு நாள் நடைபெற்ற தூதர்கள், உயர் அதிகாரிகள், மற்றும் கவுன்செல் ஜெனரல்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
 
தமிழ் ஆதரவு தரும் அமைப்புகள் துணையோடு, இலங்கைக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதற்கான கடுமையான முயற்சிகள் நடைபெற்றுவருவது குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க அப்போது கேட்டுகொண்டார்.
 
அவர் இலங்கைக்கு இழிவு ஏற்படுத்தும் விதத்தில் தமிழ் ஆதரவாளர்கள், வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள், தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் என அனைத்திற்கும் தவறான தகவல்களை தந்து கொண்டு இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
 
மேலும் இலங்கைக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை எதிர்க்க புதிய வழி முறைகளை கண்டுபிடிக்க அந்நாட்டின் பிரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இலங்கையில் வடக்கு பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்ற போருக்கு பிறகு மூன்று ஆண்டுகளில் இங்கு  22 சதவிகதம் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளதை வெளியுலகிற்கு உணர்த்த நம்மவர் தவறிவிட்டதை இங்கு சாடியுள்ளார்.
 
இலங்கையில் மற்ற பகுதிகளை தவிர வடக்கு பகுதி முன்னேற்றத்திற்க்காக அதிகம் கவனம் செலுத்துவதாக வலியுறுத்தினார். இலங்கை அதனுடைய ஒத்துழையாமை வெளியுறவு கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் மேற்கத்திய நாடுகள் ஆசியாவில் வர்த்தக நடவடிக்கைகளை துரிதபடுத்தும் வேலையில், நாம் ஆசிய பகுதியில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
 
குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் நடைபெற்று வரும் எல்.டி.டி.ஈ ஆதரவு நடவடிக்கைளுக்கு எதிராக அவற்றை முறியடிக்க இலங்கை அரசியல் சூழ்ச்சிகளுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த இரண்டு நாள் கருத்தரங்கு என்றார்.
 
இலங்கையில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா உள்ள நிலையில் இந்த தீவு பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளது என்றார்.
 
கடந்த மார்ச்சில் ஐ.நா மனித உரிமை கவுன்சில் சார்பில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாரீஸ் தாக்குதல்: பெல்ஜியம் தீவிரவாதி சிரியாவுக்கு தப்பி ஓட்டம்

புரூசெல்ஸ், டிச. 1– பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif