குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு: ஜெயலலிதா || tomorrow mettur dam open jayalalitha
Logo
சென்னை 27-05-2015 (புதன்கிழமை)
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு: ஜெயலலிதா
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு: ஜெயலலிதா
சென்னை, ஜூலை. 7-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளளார். அதில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்குப் பருவமழை மூலம் சாதாரணமாகப் பெறக்கூடிய மழை இந்த ஆண்டு கிடைக்கப் பெறவில்லை. பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னமும் திறந்துவிட இயலாத நிலை உள்ளது. எனவே, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது என்று எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் அத்தியாவசியக் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாயில் வினாடிக்கு 400 கன அடி வீதம் 8.7.2012 நாளை முதல் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தண்ணீர் மேட்டூர் அணை கிழக்குக் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி வீதமும், மேற்குக் கால்வாயில் 150 கன அடி வீதமும் வழங்கப்படும்.  இதன் மூலம், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி தாலுக்காக்கள்; நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திருச்செங்கோடு தாலுக்கா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பவானி தாலுக்கா ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோவுக்கு அமோக வரவேற்பு

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவனும், மாணவியும் காதல் வயப்பட்டு டேட்டிங்குக்கு செல்லும்போது அவர்களை ....»

MM-TRC-Set2-B.gif