ஜார்க்கண்டில் சரக்கு ரெயிலை சிறை பிடித்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்: 6 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு || jharkhand maoist capture good train release after 6 hours
Logo
சென்னை 08-07-2015 (புதன்கிழமை)
ஜார்க்கண்டில் சரக்கு ரெயிலை சிறை பிடித்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்: 6 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
ஜார்க்கண்டில் சரக்கு ரெயிலை சிறை பிடித்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்: 6 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
லட்டேகர், ஜூலை.7-
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  முக்கியமாக ரெயில் தண்டவாளங்களை தகர்ப்பது, என்ஜின்களை தீவைத்து எரிப்பது, அரசு கட்டிடங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போன்ற அராஜ செயல்களை செய்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இதுபோன்ற காரியத்தை செய்தனர்.
 
இன்று அதிகாலையில் சரக்கு ரெயிலை மாவோயிஸ்டுகள் சிறைப்பிடித்தனர். லட்டேகார் மாவட்டம் ஹெககாரா என்ற இடத்தில் வந்த சரக்கு ரெயிலை மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தில் தடுப்புகள் ஏற்படுத்தி நிறுத்தினர். சுமார் 6 மணி நேரம் அந்த சரக்கு ரெயிலை தாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
 
இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பல்வேறு இடங்களில் மாவோயிஸ்டுகள் தடைகளை ஏற்படுத்தி இருந்ததால் அங்கு சீக்கரமாக சென்று சேர முடியவில்லை.
 
சிறைப்பிடிக்கப்பட்ட 6 மணி நேரம் கழித்தே பாதுகாப்பு படையினர் அங்கு போய்ச் சேர்ந்தனர். பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதை அறிந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டனர்.
 
மாவோயிஸ்டுகளால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு ரெயில் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயில் சிறை பிடிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்து செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
 
சரக்கு ரெயில் மீட்கப் பட்ட பின்னரே, ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதுவரை பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மேகி நூடுல்சை அழிப்பதற்கு அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடி வழங்கிய நெஸ்லே

இந்தியாவில் மேகி நூடுல்சில் ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி அதன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை ....»