ஐதராபாத் ஐகோர்ட்டு விசாரணையை நிறுத்துமாறு வழக்கு: ஆந்திர மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் || andhra minister fine Hyderabad high court enquiry stop case
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
ஐதராபாத் ஐகோர்ட்டு விசாரணையை நிறுத்துமாறு வழக்கு: ஆந்திர மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஐதராபாத் ஐகோர்ட்டு விசாரணையை நிறுத்துமாறு வழக்கு: ஆந்திர மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
நகரி, ஜூலை.7-

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்ப மந்திரியாக இருப்பவர் பொன்னால லட்சுமய்யா. இவர் 2009-ம் ஆண்டு ஜனகாம தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சி வேட்பாளர் கொம்மூரி பிரதாப்ரெட்டி தோல்வி அடைந்தார். அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில், மந்திரி பொன்னால லட்சுமய்யா வாக்கு எண்ணும் போது அதிகார துஷ்பிர யோகம் செய்து வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை நிறுத்தி வைக்க கோரி மந்திரி பொன்னால லட்சுமய்யா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.எஸ்.டாவர், நீதிபதி ஞானசுதா மிஸ்ரா முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி நடந்தது. ஜனகாம தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 431 வாக்குகள் மட்டுமே பதிவாயின. ஆனால் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 678 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டதாக கொம் மூரி பிரதாப் ரெட்டியின் வக்கீல் வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-

தேர்தல் அதிகாரியின் விவரப்படி மொத்தம் உள்ள 250 வாக்குப்பதிவு மையங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 678 வாக்குகள் பதிவானதாக அறிவித்துள்ளனர். ஆனால் பதிவேட்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 431 வாக்குகள் பதிவானதாக காட்டியுள்ளனர். இதில் இருந்தே அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தது நல்லதல்ல. எனவே மந்திரி பொன்னால லட்சுமய்யாவிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

நீதிபதிகளின் இந்த அதிரடி தீர்ப்பை கேட்டு மந்திரி பொன்னால லட்சுமய்யா அதிர்ச்சி அடைந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நேபாளத்தில் இருந்து இன்று மட்டும் சாலை மார்க்கமாக 1038 பேர் இந்தியா வந்தடைந்தனர்

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர நில நடுக்கத்தின் ஒவ்வொரு மணிநேரமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் ....»

amarprakash160-600.gif