அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற அன்னாஹசாரே ஆதரவாளர் மீது காங்கிரசார் தாக்குதல் || congress attack anna hazare team supporter assam flood
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற அன்னாஹசாரே ஆதரவாளர் மீது காங்கிரசார் தாக்குதல்
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற அன்னாஹசாரே 
ஆதரவாளர் மீது காங்கிரசார் தாக்குதல்
கவுகாத்தி, ஜூலை. 7-

சமூக சேவகர் அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அசாம் மாநில நிர்வாகி அகில் கோகாரி. இவர் டெல்லியில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது அசாமில் ஆதரவாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமீபத்தில் அசாமில் பலத்த மழையால் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு சரியாக செய்யவில்லை என்று அகில் கோகாரி குற்றம் சாட்டினார்.

நேற்று அவர் நல்பாரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்றபோதும் இதுபோல் குற்றம் சாட்டினார். இதனால் ஆவேசம் அடைந்த இளைஞர் காங்கிரசார் அவரை சுற்றி வளைத்து தாக்கி அடித்து உதைத்தனர்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடியவன் கைது

மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே ....»