அர்ஜென்டினாவில் குழந்தைகளை திருடி கொன்ற முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு ஜெயில் || argentina children theft kileed ex president fifty year jail punishment
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
  • பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்கா சாம்பியன்
  • தருமபுரி: பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
  • 6 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
  • ஆம்பூர், வாணியம்பாடியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்
  • பிலிபைன்ஸ் நாட்டில் 2வது நபருக்கு மெர்ஸ் நோய் தாக்கம்
  • 6 இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இரவு முழுவதும் துப்பாக்கி சூடு
அர்ஜென்டினாவில் குழந்தைகளை திருடி கொன்ற முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு ஜெயில்
அர்ஜென்டினாவில் குழந்தைகளை திருடி கொன்ற முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு ஜெயில்
பியூனஸ்ஏர்ஸ், ஜூலை 7-

அர்ஜென்டினாவில் கடந்த 1976 முதல் 1981-ம் ஆண்டுவரை ஜோர்ஜ் விதெலா (86) அதிபராக இருந்தார். அவரை தொடர்ந்து 1982 முதல் 1983-ம் ஆண்டு வரை ரெனால்டோ பிக்னான் என்பவர் அதிபர் பதவி வகித்தார். இவர்கள் கொடும் சர்வாதிகாரிகளாக திகழ்ந்தனர். இவர்களை எதிர்க்கும் மக்களிடம் அடக்கு முறைகளை ஏவி விட்டனர்.

எனவே இவர்களுக்கு எதிராக இடது சாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தாக்குதல் நடத்த வரும் ராணுவத்தினரிடம் இருந்து தங்களை பாதுகாக்க குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தினர். இதனால் வெறி கொண்ட இந்த 2 சர்வாதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் குழந்தைகளை ராணுவ வீரர்கள் மூலம் திருடி கொன்று குவித்தனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண்களை பியூனஸ் ஏர்ஸ் ஆஸ்பத்திரியில் கைவிலங்கு போட்டு அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். மேலும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் முகத்தை கூட அவர்களிடம் காட்டாமல் திருடி சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போர் விமானங்களில் கடத்தி சென்று நடுக்கடலில் நிர்வாணமாக வீசினர். இவர்களின் கொடுமையால் சுமார் 500 குழந்தைகள் திருடி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இவர்களின் ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து இவர்கள் உள்பட 11 ராணுவ அதிகாரிகள் மீது அர்ஜென்டினா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் விதெலாவுக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் மற்றொரு முன்னாள் அதிபர் ரெனால்டோ பிக்னானுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் தவிர 9 ராணுவ அதிகாரிகளுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் வழக்கு நடைபெற்ற போது 2 பேர் மரணம் அடைந்து விட்டனர். இந்த தீர்ப்பு அர்ஜென் டினாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

மலேசிய பிரதமர் மீது ரூ.4,500 கோடி ஊழல் குற்றசாட்டு: விசாரணைக்கு உத்தரவு

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு நிதியில் இருந்து அவரது ....»