தொழில் அதிபரிடம் மோசடி: நித்யானந்தா குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு || america court judgement entrepreneur cheating nithyananda criminal
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
தொழில் அதிபரிடம் மோசடி: நித்யானந்தா குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
தொழில் அதிபரிடம் மோசடி: நித்யானந்தா குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
சென்னை, ஜூலை 7-

உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங்க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்துள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன், நித்யானந்தா இன்வெஸ்ட் மென்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல்யூஷன் போன்ற பல நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழில் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழியினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண்டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் வாழ ஏங்குவார்கள். அப்படி ஏங்குபவர்கள் வரிசையில் பாபட்லால் தம்பதியும் ஒன்று.

கடந்த 2005-ல் அமெரிக்காவில் நித்யானந்தா சுற்றுப்பயணம் செய்த போது அவரது ஆன்மீக உரையையும், வேத பாராயண திறமையையும் பார்த்து பாபட்லால் தம்பதியினர் மெய்சிலிர்த்து போனார்கள். ஆன்மீக குருவாக போற்றி நித்யானந்தாவின் தரிசனத்துக்கு தவம் கிடந்தனர்.

பாபட்லாலின் வசதி வாய்ப்புகளை புரிந்து கொண்ட நித்யானந்தா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதா பல்கலைகழகம் நிறுவ ஆசைப்படுவதாக கூறினார். அதை வரவேற்ற பாபட்லால் 1.7 மில்லியன் டாலர் அதாவது ரூ.9.35 கோடி பணம் நன்கொடையாக வழங்கினார். அந்த பணத்தை வைத்து நித்யானந்தா வேத பல்கலைக்கழகம் தொடங்கவில்லை. மாறாக தனது நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டார்.

இதற்கிடையில் நித்யானந்தா- ரஞ்சிதா சல்லாப சி.டி. வெளியானதை பார்த்ததும் பாபட்லால் அதிர்ந்து போனார். நித்யானந்தாவின் இன்னொரு முகத்தை பார்த்த பாபட்லால் கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் நித்யானந்தா திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பாபட்லால் கலி போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் வில்சன் கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா பவுண்டேஷன் அமெரிக்க நிதிச்சட்டப்படி செயல்பட வில்லை. அதனால் இது ஒரு மோசடி நிறுவனம் இந்த நிறுவனத்தில் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரை திருப்பி தர வேண்டும். இந்த வழக்கின் தண்டனை விபரம் 19-ந்தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

எனவே 19-ந்தேதி தண்டனை விபரம் என்ன? என்பது தெரிய வரும். அமெரிக்க சட்டங்கள் மோசடியை தீவிரமாக தண்டிக்கக் கூடிய வகையில் உள்ளது. கடுமையான தண்டனைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆப்பு வைத்ததை கேள்விப்பட்டதும் மதுரை ஆதீன மட விவகாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மதுரை ஆதீன மீட்பு குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இது பற்றி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை கண்ணன் கூறும் போது, இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்து கொண்டு இளைய ஆதீனம் பட்டத்தை திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கவுரவம் காப்பாற்றப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி உளவு செயற்கை கோளை வடகொரியா விண்ணில் செலுத்திய நிலையில், இது ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif