போதையில் கோர்ட்டுக்கு வந்ததாக புகார்: ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு || court drug come complaint actress urvashi daughter denial
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
  • ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம்: இன்று முதல் அமல்
  • தமிழகத்தில் 3 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
போதையில் கோர்ட்டுக்கு வந்ததாக புகார்: ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு
போதையில் கோர்ட்டுக்கு வந்ததாக புகார்: ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு
திருவனந்தபுரம், ஜூலை.7-

பிரபல நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (வயது 12) என்ற மகள் உள்ளார். ஊர்வசியும், மனோஜ் கே.ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். அவர்களது மகள் குஞ்ஞாச்சா ஜெயனிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் ஊர்வசி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஓணம், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்களிலும், கோடை விடுமுறையில் 15 நாட்களும், 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வசியுடன் குழந்தையை அனுப்ப உத்தரவிட்டனர்.

ஊர்வசியுடன் குழந்தையை அதிக நாட்கள் அனுப்ப முடியாது என்று கோரி ஜெயன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ஜூலை 6-ந் தேதி முதல் ஒருவாரம் ஊர்வசியுடன் மகளை அனுப்ப வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு குஞ்ஞாச்சாவை ஜெயன் அழைத்து வர வேண்டும், அங்கிருந்து ஊர்வசி அவரை அழைத்து செல்லலாம் என கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு ஜெயன் தனது மகளை அழைத்து வந்திருந்தார். விசாரணையின் போது ஊர்வசியுடன் செல்ல அவரது மகள் குஞ்ஞாச்சா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து குஞ்ஞாச்சா, தந்தை ஜெயனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார். அவர் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி கிடக்கிறார். இதனால் எனது குழந்தை அவருடன் செல்ல மறுத்து விட்டது. நீதிபதியும் குழந்தையை நானே அழைத்து செல்ல உத்தரவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆலோசகர் நியமனம்

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ், நீதிபதி ....»