அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா செல்வாக்கு அதிகரிப்பு || america president election obama popularity increase
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா செல்வாக்கு அதிகரிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல்:
 ஒபாமா செல்வாக்கு அதிகரிப்பு
வாஷிங்டன், ஜூலை 7-

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஓபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். எனவே, இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நிதி திரட்டுவதில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு பிரச்சினையால் ஓபாமாவின் செல்வாக்கு சரிந்த நிலையில் இருந்தது. எனவே, ஓபாமா தனது பிரசார வியூகத்தை மாற்றியுள்ளார். மிட்ரோம்னி மகாசும் மாகாணத்தில் கவர்னராக இருந்த போது அவுட் சோர்சிங் வேலைகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வழங்கினார். இதனால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறித்தார். வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியவர் மிட்ரோம்னி என்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மேலும் ஒபாமா கொண்டு வந்துள்ள அனைவருக்கும் சுகாதார திட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. எனவே, அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு 45 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சமீபத்தில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இன்டர் நேஷனல் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்தது.

மிட்ரோம்னியின் செல்வாக்கு 49-ல் இருந்து 46 சதவீதமாக அதாவது 3 சதவீதம் குறைந்துள்ளது. “கால் அப்”, “நியூஸ் வீக்” டெய்லி பீஸ்ட் போன்றவை நடத்திய கருத்து கணிப்புகளும் இதே கருத்தை தான் தெரிவிக்கின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

லிபியாவில் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு மரண தண்டனை

லிபியாவில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடந்த போராட்டங்களை ஒடுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சர்வாதிகாரி ....»

MM-TRC-B.gif