விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் முர்ரே; செரீனா 5 வது முறையாக பட்டம் பெற வாய்ப்பு || federer in Wimbledon tennis finals
Logo
சென்னை 19-09-2014 (வெள்ளிக்கிழமை)
  • மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மரணத்திறக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த டோனி
  • மதுரையில் 3 பேர் வெட்டிக்கொலை
  • நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது
  • பெங்களூரில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
  • ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முதன்முறையாக வான்வழி தாக்குதல்
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்- முர்ரே; செரீனா 5-வது முறையாக பட்டம் பெற வாய்ப்பு
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்- முர்ரே; செரீனா 5-வது முறையாக பட்டம் பெற வாய்ப்பு
லண்டன், ஜூலை. 7-
 
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 4-ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே (இங்கிலாந்து)- ஐந்தாம் நிலை வீரரான வில்பிரைட் டிசோங்கா (பிரான்ஸ்) மோதினார்கள்.
 
இதில் முர்ரே 6-3, 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 76 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து வீரர் இப்போதுதான் தகுதி பெற்றுள்ளார். அந்த பெருமை ஆண்டி முர்ரேயை சாரும். கடைசியாக 1936-ம் ஆண்டு இங்கிலாந்து வீரரான பெரி விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.
 
முர்ரே இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலகின் 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொள்கிறார். பெடரர் அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச்சை (செர்பியா) 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
 
பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ரட்வான்ஸ்கா (போலந்து) மோதுகிறார்கள். செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் பட்டத்தை 4 முறை கைப்பற்றி உள்ளார். 5-வது முறையாக பட்டம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரட்வான்ஸ்கா முதல் முறையாக கிராண்ட்சிலாம் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளார்.
 
ரண்ட்வான்ஸ்கா உடல் நலக்கோளாறு காரணமாக நேற்றைய நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்தார். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில் அவர் முழு உடல் தகுதியுடன் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சாம்பியன்ஸ் லீக் டி.20: இன்று கேப் கோப்ராசும் நார்தன் டிஸ்டிரிக்ட்சும் மோதுகின்றன

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் டி.20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் ....»