மும்பை தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கி வெடிபொருட்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ வழங்கியது அபு ஜிண்டால் || SI officer provided cartridges for 26 11 claims Abu Jundal
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
மும்பை தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கி வெடிபொருட்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ வழங்கியது- அபு ஜிண்டால்
மும்பை தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கி வெடிபொருட்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ வழங்கியது- அபு ஜிண்டால்
புதுடெல்லி, ஜூலை.7-
 
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எந்தவித உதவியும் தூண்டுகோலும் செய்யவில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அபு ஜிண்டால் நேற்று மும்பை தாக்குதலுக்கு தேவையான அனைத்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் அடங்கிய இரு பெட்டிகளை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ வழங்கியது என்று கூறியுள்ளான்.
 
சவுதி அரேபியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு டெல்லி போலீஸ் வசமிருக்கும் அபு ஜிண்டால் பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுப்பிரிவில் வேலைபார்க்கும் சமீர் என்ற மேஜர் ஒருவர் அந்த ஆயுதங்களை வழங்கினார் என்று விளக்கமளித்துள்ளான்.
 
மகாராஷ்ட்ராவில் பிறந்த அபு ஜிண்டால், மும்பை தாக்குதலில் 166 பேரை கொல்ல காரணமாக இருந்த தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து வழிநடத்திய கராச்சி கட்டுப்பாடு அறையில் செயல்பட்டவன்.அவன் அளித்து வரும் தகவல்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அதிகாரிகளின் சதி வேலைகளை விவரிக்கிறது.
 
பாகிஸ்தான் முசாபராபாத் அருகிலுள்ள பைட்-உல்-முஜஹிதீன் என்ற தீவிரவாத முகாமில் மும்பை தாக்குதலுக்காக நன்கு பயிற்சி பெற்று தயாராக இருந்த தீவிரவாதிகளிடம் A K 47 துப்பாக்கிகள் அடங்கிய இரண்டு பெட்டிகளை ஐ.எஸ்.ஐ உளவாளி மேஜர் சமீர் கொடுத்தார் என்று கூறினான்.
 
மும்பை தாக்குதலுக்கு இடம் குறித்த தகவல் தந்த உதவிய பாகிஸ்தானிய அமெரிக்கன் டேவிட் ஹெட்லி கூட மேஜர் சமீர் அலி என்ற ஐ.எஸ்.ஐ உளவாளி தனக்கு பயிற்சி அளித்தார் என்று கூறியுள்ளான்.
 
மும்பை தாக்குதலுக்கு பிறகு கராச்சி கட்டுப்பாட்டு அறை சோதனையிடப்பட்டதும அங்கிருந்தவர்கள் அனைவரும் களைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் அப்போது சகி உர் ரெஹ்மான் லக்ஹவி என்ற லஷ்கர் கம்மண்டேர் கைது செய்யப்பட்டார் என்றும் அபு ஜிண்டால் தெரிவித்திருக்கிறான்.
 
அபு ஜிண்டால் போல் உதவிய மற்றொரு தீவிரவாதியான முசாமில் என்பவன் பின்னர் லஷ்கர் இயக்கத் தலைவனாக பொறுப்பேற்றதாகவும் அவன் சொன்னான். பிறகு அவன் அபு ஜிண்டாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அதிகாரியான  கலோநெல் ஹம்சா என்பவனை சந்திக்க அழைத்து சென்றதாகவும் அபு ஜிண்டால் கூறினான். ஆனால் அபு ஜிண்டால் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் ஜெயிலில் உள்ள லக்ஹவியை சந்திக்க சென்றிருக்கிறான் என்றும் இந்தியா இது குறித்த ஆதாரங்களை பார்க்கத்தான் போகிறது என்று தீவிரவாத தரப்பு கூறிவருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சக கல்லூரி மாணவியை மிரட்டி 6 மாதமாக கற்பழித்தவன் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். மும்பையின் தராவியைச் ....»

MudaliyarMatrimony_300x100px.gif