சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது முதலமைச்சர் ஜெயலலிதா || Lankan airmen should not be trained anywhere in India Jaya
Logo
சென்னை 26-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • த.மா.கா. தலைவர் வாசன் இன்று டெல்லி செல்கிறார்
  • நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சோனியா, ராகுல்காந்தி இரங்கல்
  • நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை சீரமைக்க நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் உத்தரவு
  • நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்
  • நிலநடுக்கத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு அறிவிப்பு
  • கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியுடன் இன்று விஜயகாந்த் திடீர் சந்திப்பு
  • நேபாள நாட்டிற்கு மீண்டும் விமான சேவையை துவக்கியது ஏர் இந்தியா
சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது-முதலமைச்சர் ஜெயலலிதா
சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது-முதலமைச்சர் ஜெயலலிதா
சென்னை,ஜூலை.7-
 
இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழர்களுக்கு எதிராக ஒருதலை பட்சமாக மத்திய அரசு செயல்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது ஏற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு தாம்பரம் அருகில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கும் மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது.
 
இந்நிலையில் இலங்கை விமானப்படை வீரர்களை பெங்களூருக்கு அருகிலுள்ள யலகங்க விமானப்படை பயிற்சி மையத்திற்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது என்றும், இது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கும் நிலையில் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது, தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்ப்படித்தியுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.
 
இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக  நடைபெற்ற இறுதிப் போரில் பல்வேறு அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தவர்களை போற்குற்றவாளியாக தண்டிக்க வேண்டி எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில், பெங்களூரில் இலங்கை விமானப்படையினருக்கு நடைபெற உள்ள இந்த பயிற்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
 
மேலும் இந்தியாவில்  இலங்கை இராணுவத்திற்கு எங்கும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சக மனிதர்களுக்காக இரவு முழுவதும் பிரார்த்தனை நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தில் கடந்த 81 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கோர ....»

amarprakash160-600.gif